தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட இந்திய தேசத்தின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் அவருடன் உயிர் நீத்தவர்களுக்கும் காஷ்மீரில் பஹல்காமில் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்ட இந்து சகோதரர்களுக்கும் தீவிரவாதிகளை எதிர்த்து போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கும் மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி சென்னை சூலையில் உள்ள பாரத் இந்து முன்னணி தலைமை அலுவலகம் அருகே ஆதிசிவ சோழர் புலிப்படையின் நிறுவனத் தலைவர் மு சிவபாலன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பாரத் இந்து முன்னணியின் நிறுவனத் தலைவர் ஆர் டி பிரபு மற்றும் இந்து முன்னணி முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆதி சிவ சோழர் புலிப்படையின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் தொடர்ந்து ஆதி சிவ சோழர் புலிப்படையின் நிறுவனத் தலைவர் மு சிவபாலன் செய்தியாளரிடம் கூறியது முன்னாள் பாரதப் பிரதமர் திரு ராஜீவ் காந்தி அவர்களை ஸ்ரீபெரும்புதூரில் திட்டமிட்டு வேலு பிரபாகரன் சூழ்ச்சியால் கொல்லப்பட்டவர் எனவும் அதே வேளையில் தமிழினத்திற்கும் தமிழ் தேசியத்திற்கும் துரோகம் செய்கின்ற வகையில் இலங்கையில் உள்ள தமிழர்களை கொன்று குவிப்பதற்கு காரணமான வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழர்களை பாதுகாப்பதாக பொய் சொல்லி அவர்களை ஏமாற்றி இருப்பது மிக கொடும் செயல் என்றும் அதேபோல் தமிழ்நாட்டில் சில தீய சக்திகள் குறிப்பாக சீமான் போன்ற நபர்களால் தமிழினத்திற்கும் தமிழ் தேசியத்திற்கும் கேடு விளைவிக்கின்ற வகையில் விடுதலைப்புலிகள் வேலுப்பிள்ளை பிரபாகரனை முன்வைத்து அரசியல் நாடகம் செய்து வருவதாகவும் தமிழ் தேசியத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இன்னுயிர் நீர்த்த தலைவர்கள் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் காமராஜர் வ உ சி சிதம்பரம் பிள்ளை கக்கன் அழகு முத்துக்கோன் தீரன் சின்னமலை இரட்டைமலை சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்களின் வரலாற்றை சிதைக்கின்ற வகையில் சீமான் செயல்பாடுகள் இருக்கிறது என்றும் ஆகவே தமிழக மக்களால் சீமானுடைய பொய் மூட்டைகளை நம்ப வேண்டாம் என்றும் அவரை அரசியலில் இருந்து தூக்கி எறியப்பட வேண்டும் உண்மையான தமிழ் தேசியவாதிகளை முன்னிறுத்த வேண்டும் என தெரிவித்தார் பெரியார் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகியோர் தமிழ் இனத்தின் மிகப்பெரிய எதிரிகள் என்றும் மேலும் இவர்களை ஆதரிக்கும் திருமாவளவன் சீமான் போன்றோர் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தருபவர்கள் என்றும் கூறினார் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறியவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது இதை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகளுக்கு ஆதரவானவர்கள் தான் தீவிரவாதம் எந்த வடிவில் வந்தாலும் இந்து இயக்கங்கள் ஒன்றிணைந்து அதை வேரோடு வேராக தூக்கி எறிவார்கள் என்று தெரிவித்தார். இறுதியாக தமிழின துரோகி வேலுப்பிள்ளை பிரபாகரனை கொடும்பாவி என பிரபாகரன் திருவுருவபடம் எரிக்கப்பட்டது. மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்து சகோதரர்களுக்கும் தீவிரவாதிகள் எதிர்த்து இன்னுயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கும் தன்னுடைய வீர வணக்கத்தை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் அனைத்து இந்திய திருக்கோயில் கூட்டமைப்பின் மாநில செயலாளர் கோபிநாத் அனுமன் சேனா மாநில செயலாளர் மீனாட்சிசுந்தரம் அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் வழக்கறிஞர் ராஜேஷ் பாபு அகில பாரத இந்து மக்கள் சேனா செயலாளர் செந்தில்குமார் தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் மாநிலத் தலைவர் ரவிராஜ் அமைப்பாளர் சத்தியமூர்த்தி இந்து மக்கள் முன்னணி மாநகர செயலாளர் ராஜா உள்ளிட்ட இந்து முன்னணி சார்ந்தவர்கள் ஆதிசிவ சோழர் புலிப்படையின் நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


More Stories
‘Drug Free Tamil Nadu 1000 people participated in the Grand human chain rally.
శోభా రాజా నివాసంలో వైభవంగా వరలక్ష్మీ పూజలు
கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?