March 7, 2026

ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் – மாபெரும் கண் பரிசோதனை மருத்துவ முகாம். நடைபெற்றது.

ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்க வளாகத்தில் 01.08.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணிவரை அகத்தர உறுதி அமைப்புக்குழு, இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம், யங் இந்தியன் மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச
கண் பரிசோதனை முகாம் மிகச்சிறந்த முறையில் நடைபெற்றது.

ராஜன் கண் மருத்துவமனை மற்றும் சென்னை விஷன் சாரிடபிள் டிரஸ்ட், வித்யோதயா இரண்டாவது தெரு, தி- நகர், சென்னை 17 மருத்துவமனை மருத்துவர்கள் மூலம் கண் பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனைப்படி தேவைப்படுபவர்களுக்கு இலவச முக்கு கண்பாடிகள் வழங்கப்படுவதுடன், இலவச கண்புரை அறுவை சிகிச்சையும் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

இவ்விழாவில் கல்லூரித் தாளாளர் ஸ்ரீ வூட்டுக்குரு சரத்குமார் அவர்கள், பொருப்பு முதல்வர் முனைவர் பி.பி.வனிதா அவர்கள், துணை முதல்வர் முனைவர். எம். வி. நப்பின்னை அவர்கள், அகத்தர உறுதி அமைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் பி. பரணி குமாரி அவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி தேவஸ்தானம் பள்ளி மாணவர்கள், ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி மகளிர் கல்லூரி மாணவியர்கள் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் என 350கும் மேற்பட்டோர்
கலந்து கொண்டு பயன் பெற்றனர். ராஜன் கண் மருத்துவமனை மருத்துவர்களுக்கு கல்லூரி தாளாளர் ஸ்ரீ வூட்டுக்குரு சரத்குமார் அவர்கள் அவர்கள் நினைவுப் பரிசுகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

About Author