சென்னை அமைந்தகரையில் உள்ள அகிலா விளையாட்டு மைதானத்தில் வீரத்தமிழன் சிலம்பக் கலைக்கூடம் இந்தியாவின் பாரம்பரிய தற்காப்பு கலையை உலக அரங்கில் உயர்த்தும் நோக்கில் 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு கின்னஸ் உலக சாதனை சிலம்ப நிகழ்ச்சி நடத்தியது 45 நிமிடங்கள் தொடர்ந்து தேசியக்கொடி டி-ஷர்ட் அணிந்து சிலம்பம் ஆடும் நிகழ்வு நடைபெற்றது நூற்றுக்கணக்கான சிலம்ப வீரர்கள் சிலம்பாட்ட உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்றனர் இந்நிகழ்ச்சியில் அமைந்தகரை கவுன்சிலர் திருமதி வேல்முருகன் செல்வி மற்றும் ஹரிதாஸ் சண்முகா பிரியா அவர்கள் கலந்து கொண்டு 79 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் கொடியேற்றி சிறப்பித்தனர் சிலம்பாட்டம் என்பது தமிழர்களின் பாரம்பரிய ஆட்டமாகும் மற்றும் போர் முறையும் ஆகும் இதிலிருந்து தான் கராத்தேவே வந்ததாக கூறப்படுவதும் உண்டு வீர தமிழன் சிலம்பக்கூடம் நிறுவப்பட்டு ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது இந்த கலைக்கூடத்தை நிறுவியவர்கள் விவேதா வேல்முருகன் மற்றும் ரிதேஷ் கண்ணா ஆவார் சிலம்ப பயிற்சியாளராக விவேதா வேல்முருகன் உள்ளார் கலைக்கூடத்தின் மேலாளராக ரிதேஷ் கண்ணா உள்ளார் இது குறித்து பயிற்சியாளர் மற்றும் கலைக்கூட நிறுவனர் விவேதா வேல்முருகன் செய்தியாளரிடம் இந்த பயிற்சி கூடம் தொடங்கி 5 ஆண்டு வெற்றிகரமாக பயணத்தை தொடர்ந்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்துத்துள்ளது என்றும் சர்வதேச அளவில் வீர வீராங்கனைகளை உருவாக்குவது எங்கள் நோக்கமாகும் என்றும் சமூகத்தில் சிலம்பக் கலையை ஊக்குவித்து தேசிய மற்றும் சர்வதேச அளவில் பரப்புவதே எங்கள் நோக்கம் என்று தெரிவித்தார் மேலும் பெண்களுக்கு நிகழும் பாலியல் தொல்லைகளுக்கு அவர்கள் சிலம்பாட்டத்தை தெரிந்து கொள்வதே தீர்வாகும் சிலம்பாட்டம் என்பது ஒரு தற்காப்பு கலையாகும் மேலும் உடலுக்கும் மனதுக்கும் வலு சேர்க்கும் கலையாகும் என்றும் அரசு சிலம்பாட்டத்தை பள்ளிகளிலே மாணவ மாணவிகளுக்கு கற்றுத் தர வேண்டும் என்றும் தெரிவித்தார் .
சிலம்பாட்டத்தில் தொடர்ந்து 45 நிமிடம் விளையாடி உலக சாதனைவீர தமிழன் சிலம்ப கலைக்கூடம்


More Stories
பல்லாவரத்தில் அதிமுகவினர் இடையே கோஷ்டி மோததால் பரப்பரப்பு.
JVS ARUMUGAM Submits Expression of Interest to Contest from Nellithope Constituency
மக்களின் சிரமங்களை தென்னக ரயில்வே துறை பொருட் படுத்தவில்லை- எஸ் ஆர் எம் யூ பொதுச் செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.