சென்னை வேளச்சேரி புவனேஸ்வரி நகரில் ஜெகநாதன் என்பவர் 2020ஆம் ஆண்டு சீனிவாசன் இடம் இரண்டு கிரவுண்ட் நிலத்தை வாங்கி அந்த இடத்தில் பாதுகாப்பிற்காக குடிசை அமைக்கப்பட்டு காவலாளி பணியில் அமர்த்தி இருந்தார்.
அப்படி இருந்தும் 2022 ஆம் ஆண்டு கலா ஜெயச்சந்திரன் என்பவர், அடியாட்களுடன் வந்து குடிசையை பிரித்து விட்டு காவலாளியை தாக்கி வெளியேற்றி அந்த இடத்தில் வேறு குடிசை போட்டு இந்த இடம் தனக்கு சொந்தம் என காலா ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக வேளச்சேரி காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளர் ஜெகநாதன் அவர்கள் காவல்துறையிடம் புகார் மனு அளித்து முதல் தகவல் அறிக்கை பெற்று உயர்நீதி மன்றத்தின் மூலம் நிலத்தை அளப்பதற்கான அனுமதி பெற்று வந்த நிலையில் வேளச்சேரி தாசில்தார் இந்த இடத்தை அளக்க காலம் தாழ்த்தி நிலத்தை அளப்பதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் தமிழக அரசும் காவல்துறையும் தவறு நடக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அது மட்டுமல்ல இடத்தை ஆக்கிரப்பு செய்துள்ள கலா ஜெயச்சந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் இந்த இடம் தனக்கு சொந்தம் என சங்கர், துளசி சில்க்ஸ் உரிமையாளர் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து அரசியல் பின்புலத்தோடு செயல்பட்டு வருவதாகவும் எனவே இவர்கள் மீது தமிழக அரசும் காவல் துறையும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த இடத்தை தனக்கு மீட்டு தர நீதிமன்றமும், காவல்துறையும் உதவ வேண்டும் என கூறினார்.


More Stories
Camerry Icecream Turns World Ice Cream Day into a Celebration of Gratitude, Honouring Chennai Police
Over 7,000 Runners Participate in the 15th Edition of the Hexaware Dream Runners Half Marathon 2026
Broadcast Media Cinema Expo (BMCE) 2026 Commences in Chennai