மொரிசியசு பல்கலைக்கழக வளாகத்தில் உலகத் தமிழ் மாநாடு வரும் டிசம்பர் மாதம் 6 7 8 ஆகிய நாட்களில் நடைபெற இருக்கிறது. சென்னை ஆசிய வியல் நிறுவன வளாகத்தில் மொரிசியசு நாட்டில் உலகத் தமிழ் மாநாடு நடத்துவது குறித்து அதன் ஏற்பாட்டுக் குழு தலைவர் டாக்டர் ஆறுமுகம் பரசுராமன், ஆசிய வியல் நிறுவனம் மற்றும் உலகத் தமிழ் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் ஜி. ஜான் சாமுவேல் அவர்களும் இணைந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். இச் சந்திப்பில் டாக்டர் ஜான் சாமுவேல் தமிழர்களுக்கு உள்நாட்டு வரலாற்றோடு அயலகத் தொடர்பு குறித்த வரலாறு மிக சிறப்பாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டார். சங்க காலத்தில் ரோமன், கிரேக்கர், பாபிலோனியார் ஆகியோர்களோடு நெருக்கமான வணிகத் தொடர்பு இருந்ததாக தெரிவித்தார். மேலும் சீனா, ஜப்பான் போன்ற நாடுகளோடு தமிழர்கள் தொடர்பு குறித்து இம்மாநாட்டில் ஆழ்ந்த ஆய்வுகள் மேற்கொள்ள இருப்பதாக கூறினார். இம்மாநாட்டில் வணிகத்தின் மூலமாக ஏற்பட்ட உறவுகள் முதல் நாளிலும், பிற்காலச் சோழர்கள் தெற்காசிய நாடுகளில் படையெடுத்து வெற்றி கண்ட வரலாறு இரண்டாவது நாளிலும், புலம்பெயர்ந்த தமிழர்களால் பிரதேச எல்லைகளை தாண்டி தமிழ் மொழி உலகளாவிய தமிழாக வளர்ச்சி பெற்ற வரலாறு மூன்றாவது நாளிலும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டார் மேலும் தமிழ் மொழி பிரதேச மொழியோ தேசிய மொழியோ அல்ல உலகம் மொழியாகும் தமிழர்கள் பல்வேறு நாடுகளில் வணிகத் தொடர்பு வைத்திருந்தனர். தமிழ் அறிஞர்களை மூன்று வகையாக பிரிக்கலாம் முதல் வகை தாய் தமிழ் அறிஞர்கள், அடுத்து புலம் பெயர்ந்த தமிழ் அறிஞர்கள் அடுத்து தமிழர்கள் அல்லாத தமிழ் அறிஞர்கள் இவர்களால் தமிழ் பல்வேறு காலகட்டங்களில் வளர்க்கப்பட்டுள்ளது என்றும் மொரிசியசு நாட்டில் நடைபெறும் உலகத் தமிழ் மாநாட்டில் 200க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்தார் மாநாடு முடிந்ததும் பங்கேற்பாளர்களுக்கு மொரிசியசின் சிறப்பு வாய்ந்த பகுதிகளுக்கு அவர்களை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், மாநாட்டிற்கு கட்டுரை சுருக்கம் அனுப்ப வேண்டிய கால வரையறை அக்டோபர் மாதம் இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் முழு கட்டுரை வழங்க வேண்டிய கால வரலாறு நவம்பர் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
உலக தமிழ் மாநாடு ஏற்பாட்டுக் குழு தலைவர் டாக்டர் ஆறுமுகம் பரசுராமன் திருக்குறளை உலக நூலாக அறிவிக்க வேண்டும் என்று மாநாடுகள் நடத்தியுள்ளார். திருக்குறளை உலக நூலாக அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து பல முன்னெடுப்புகளை அவர் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மொரிசியசு நாட்டில் உலகத் தமிழ் மாநாடு


More Stories
Back-to-School Gets Sweeter as Lotte Choco Pie Teams Up with Mother-Kid Influencers
ஆட்டோரெல்லி நிசான், ஐயப்பந்தாங்கலில் புதிய Nissan Tekton அறிமுகம்
IIMBue 2026 to Convene India’s Top Business Minds to ‘Change the Orbit’ of Leadership