March 7, 2026

இந்தியத் துணைக் குடியரசுத் தலைவராக சிபி ராதாகிருஷ்ணன் அவர்கள வெற்றி இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சி

இந்தியத் துணைக் குடியரசுத் தலைவராக சிபி ராதாகிருஷ்ணன் அவர்கள வெற்றி பெற்றுள்ளார் அதனை கொண்டாடும் விதமாக சென்னை கோமளீஸ்வரன் பேட்டை பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கஜபதி அவர்கள் தலைமையில் இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியை கொண்டாடினர்.

தமிழ்நாட்டைச் சார்ந்த முன்னாள் ஆளுநரும் தற்போது இந்திய துணை குடியரசுத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ள மத்திய அரசுக்கு சென்னை கோமளீஸ்வரன் பேட்டை பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்

தமிழ்நாட்டைச் சார்ந்த சிபி ராதாகிருஷ்ணன் அவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் துணை குடியரசுத் தலைவராக போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றுள்ளார் அதனை கொண்டாடும் விதமாக சென்னை கோமளீஸ்வரன் பேட்டை பகுதியில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை கொண்டாடினர்.

மேலும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்திய துணை குடியரசுத் தலைவராக திரு சி பி ராதாகிருஷ்ணன் அவர்களை தேர்வு செய்திருப்பது தமிழ்நாட்டிற்கு கிடைத்த பெருமை என்றும் அதுமட்டுமல்ல திரு சிபி ராதாகிருஷ்ணன் அவர்கள் எத்தகய பணி என்றாலும் அதனை நேர்மையாகவும் மனச்சான்றதுடனும் செயல்படுபவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் அவர்கள் மத்திய அரசு சார்பில் அவரை தேர்வு செய்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஆனால் திராவிட ஆட்சியாளர்கள் அவர்களுக்கு எதிராக வாக்களித்து அவரை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட்டனர் ஆனால் அவர்கள் எண்ணம் ஈடு ஏறவில்லை திராவிட ஆட்சியாளர்கள் கடைசிவரை இந்துக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருவதாகவும் அவர்களை மாற்றவே முடியாது என்றும் ஆனால் தமிழ்நாட்டு மக்கள் விரைவில் தூக்கி எறியப்படுவார்கள் என தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கோமளீஸ்வரன் பேட்டை பகுதி பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கோழிக்கடை கஜபதி பத்மநாபன் சோமசுந்தரம் ஜெய்சங்கர் மார்க்கெட் பாஸ்கர் அரங்கண்ணன் விஜயகுமார் சிவானந்தம் ரஷ்யா மகேஷ் அரவிந்தன் சரவணன் டீக்கடை முருகன் வேன் முருகன் சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

About Author