March 7, 2026

கலாரஞ்சனி அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ கலாரஞ்சனி இசைப் பள்ளி இணைந்து பக்தி ரஞ்சனி இசை நிகழ்ச்சி நடைபெற்றது

சென்னை மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபம் அரங்கில் கலா ரஞ்சனி அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ கலாராஞ்சினி இசைப்பள்ளி சார்பாக பக்தி ரஞ்சனி இசை நிகழ்ச்சி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் ஜே ஸ்ரீனிபாபு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வானது 13. 9. 2025 சனிக்கிழமை மாலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரை நடைபெற்றது மேலும் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு. அழைப்பாளராக கலை மாமணி ஞானஜோதி டாக்டர் ஜே. பால சுப்பிரமணியம் அவர்கள் மற்றும் சேவா ரத்னா திருமதி ஷோபா ராஜா, ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

மேலும் இப்பபள்ளியின் நிர்வாகி DR.J.SRINIBABU அவர்களால் இ சை அமைக்க பட்ட ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமம் 21 ராகங்களில் 108 இசைக் குழுவினர் கலந்து கொண்டு பாடிய இந்த இசை நிகழ்ச்சி மிக சிறப்பான முறையில் இருந்தது. அதனை மக்கள் வெகுவாக பாராட்டினார்கள். பாராட்டக்கூடிய வகையில் லலிதா சஹஸ்ரநாமம் ஸ்வரங்கள் மற்றும் கோரஸ் கலந்து பாடியபாணி அமைந்திருந்தது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் திருமதி வில்லிவாக்கம் சுஷ்மா பிரசாத் அவர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ லலிதா அம்பிகை அம்மனின் அருளாசி பற்றி பல பாடல்களுடன் பக்தி கதையினை நாம சங்கீர்தனமாக வழங்கியது அருமை. இந்நிகழ்வில் இசை ஜோதி ஆர் அன்னபூரணி நிகழ்சியினை தொகுத்து வழங்கினார். பள்ளியின் செயலாளர், சேவா ரத்னா திருமதி ஆர் ராஜலட்சுமி வரவேற்புரையும் நன்றி உரையினையும் வழங்கினார். திருமதி சங்கீதா மணிமாலா ராவ் ; திருமதி வசந்த ராணி மாலதி அருணா

ஸ்ரீநாத், மற்றும் தெலுகு தருணி மகளிர் குழு நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அடுத்ததாக இவ்விழாவின் சிறப்பு நிகழ்வான காணொலியினை திரு ஜே.பாசுப்பிரமணியன் அவர்கள் துவக்கி வைத்தார். அதனில் பள்ளி நிர்வாகியும் இசை அமைப்பாளருமான DR.J.SRINIBABU அவர்கள் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாத்திற்கு ராகம் அமைத்து ஒரே அரங்கில் மிக பிரம்மாண்டமாக ராகமாலிகையாக பாட 10,00,000 இசைபிரியர்களுக்கு கற்று கொடுத்து நிகழ்ச்சியினை நடத்த உள்ள விவரமும் விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தின் மகிமையும் காணொலியாக வெளியிடப்பட்டது

About Author