பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கிறித்துவ தலைவர்கள், போதகர்கள் முதலானோர் பிஷப் ஷாம் தலைமையில் பிரார்த்தனை செய்து கேக் வெட்டி கொண்டாடினர் .
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மைப் பிரிவு தலைவர் கோவை ஜான்சன் கலந்து கொண்டு கிறித்துவ பிஷப் போதகர்களிடையே உரையாற்றினார். மேலும் இதில் சிறப்பு அழைப்பாளராக ஆங்கிலிக்கன் சர்ச் ஆஃப் இண்டியா ஆர்ச் பிஷப் குணசீலன், யுனைடெட் கிறிஸ்டியன் ஃபெல்லோஷிப் சூப்பிரண்ட் பிஷப் மனோ டேனியல் ஆங்கிலிக்கன் ரைஸ் அண்ட் ஷைன்
தலைவர் ஜேசுதாஸ், மாஸ்டர் விஜயன் ஆகியோர் கலந்து கொண்டனர் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
இவர்களுடன் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில சிறுபான்மை பிரிவுத் தலைவர் கோவை ஜான்சன் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது பற்றிய செயல் திட்டத்தை விவரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
பாரதிய ஜனதா கட்சி பாரத பிரதமரின் பிறந்த நாள் விழாவையொட்டி நாடு முழுவதும் 2வாரங்களை சேவா வாரங்களாக கொண்டாடுகிறது. இதில் இரத்ததான முகாமில் கின்னஸ் சாதனை புரியும் வகையிலும், ஒவ்வொரும் தன்னை பெற்ற தாயின் பெயரில் ஒரு மரத்தை நடும்படியும் வலியுறுத்துகிறோம். குறிப்பாக எங்கள் சிறுபான்மை அணி ஸ்வச் பாரத் திட்டத்தின் வாயிலாக தேவாலயங்கள் , பள்ளிவாசல்கள் மட்டுமின்றி கோவில்களிலும் சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ளவிருக்கிறோம் .
மேலும் சென்னையில் வீடில்லாத வீதிகளில் வாழும் ஆதரவற்றோருக்கு தினமும் 15 நாட்கள் 500 பேருக்கு உணவளிக்க திட்டமிட்டு அதை பிஷப் ஷாம் ஏற்பாட்டில் செய்து கொண்டிருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.


More Stories
‘Drug Free Tamil Nadu 1000 people participated in the Grand human chain rally.
శోభా రాజా నివాసంలో వైభవంగా వరలక్ష్మీ పూజలు
கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?