March 7, 2026

44 ஆம் ஆண்டு உலக அமைதி தினத்தை முன்னிட்டு மற்றும் சண்டை நிறுத்தத்தை வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிர போராட்டம்

உலகத் தலைவர்களை ஒன்றிணைத்து அமைதிக்கான கூட்டமைப்பை ஏற்படுத்த பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முன்னெடுக்க வேண்டும் என அமைதிப் பேரவையின் தலைவர் நித்தியானந்தtham வேண்டுகோள் வைத்தார்.

44 ஆம் ஆண்டு உலக அமைதி தினத்தை முன்னிட்டு சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் உலக அமைதி மற்றும் சண்டை நிறுத்தத்தை வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிர போராட்டம் நடைபெற்றது. முதுபெரும் எழுத்தாளர் பத்திரிக்கை ஆசிரியர் ராயபுரம் கடலார் அவர்களின் துவக்க உரையுடன் அமைதி பேரவை தலைவர் கவிஞர் பூ.செ.செ. நித்தியானந்தம் தலைமையிலும், இந்திய மீனவர் சங்கத் தலைவர் டாக்டர் டி தயாளன் முன்னிலையில் நடைபெற்றது சமூக சேவகர் பத்மஸ்ரீ பாலம் கல்யாணசுந்தரம் அவர்கள் thamathamaka கலந்து கொண்டthal உண்ணாவிரத்தின் முடிவில் kadalar avarkal பழரசம் கொடுத்து முடித்து வைத்தார். தொடர்ந்து அமைதிப் பேரவையின் தலைவர் கவிஞர் நித்தியானந்தம் அவர்கள் கூறுகையில் உலகமெங்கும் போர் மேகம் சூழ்ந்துள்ள இந்த காலகட்டத்தில் நாம் தெரிந்தோ தெரியாமலோ வாழ்ந்து கொண்டிருக்கிறோம் சாலைகளில் ரத்த வெள்ளம் என்று பெருக்கெடுக்குமோ அச்சத்துடன் வாழ்ந்து வருகிறோம் சண்டை என்பது சங்க காலத்தில் இருந்து ஒரு மன்னனும் இன்னொரு மன்னனும் அதிகாரத்திற்காக போர் புரிந்து கொண்டு தான் இருந்தார்கள். ஆனால் அப்போது saண்டை ulaga நாடுகளுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை ஆனால் இன்று உலகமயமாக்கல். அதன் காரணமாக எங்கோ நடக்கும் ரஷ்யா உக்ரைன் போராலும் இஸ்ரேல் காசா போராலும் நாம் பெரிதும் பாதிக்கப்படுகிறோம் இதனால் விலைவாசி மிகவும் உயர்ந்துள்ளது உலகம் அமைதியாக இருந்தால்தான் நாம் நிம்மதியாக வாழ முடியும் உலக மயமாக்கல் என்பதால் உலகத்தில் எந்த மூலையில் போர் நடந்தாலும் பல்வேறு நாடுகள் பாதிக்கப்படுகிறது இரண்டாம் உலகப்போருக்கு பின் உலக பொருளாதாரம் வலுவிழந்த நிலையில் அப்போதுதான் 1945 ஆம் ஆண்டு ஐநா சபை ஆரம்பிக்கப்பட்டது அதன் குறிக்கோள் உலகெங்கும் அமைதி நிலவ வேண்டும் பொதுமக்களின் உயிர் சேதம் தவிர்க்கப்பட வேண்டும் நாடுகளுடன் போர் இருக்கக் கூடாது என்பதுதான் ஆனால் அது சட்டமாக்கப்படவில்லை அதன் காரணமாக பல நாடுகள் அவர்களுக்கு அது நியாயமாக காரணம் இருந்தாலும் போரில் ஈடுபடுகின்றனர் அதனால் குறுதி வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது எண்ணற்ற பொதுமக்களின் உயிர்களை பலி கொண்டுள்ளது இப்போர்கள். பொருளாதாரத்தில் மற்றும் வாழ்வாதாரத்தில் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்கள் இக்காலகட்டத்தில் அதிகாரம் மிக்க உலகக் கூட்டமைப்பு அமைதிக்காக தேவைப்படுகிறது போர்பந்தரில் பிறந்த காந்தி மகான் கத்தி இன்றி ரத்தம் இன்றி சுதந்திரம் வாங்கி கொடுத்தார் அதே குஜராத்தை சேர்ந்த நம் பாரத பிரதமர் மோடி அவர்கள் ரஷ்யா சைனா அமெரிக்கா matrum soudi arabia போன்ற நாட்டுத் தலைவர்களை ஒருங்கிணைத்து உலக அமைதிக்காக ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்

About Author