கரூரில் தமிழ்நாடு வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அப்பாவி பொதுமக்கள் 41பேர் உயிரிழந்திருப்பது வேதனைக்குரியது என மக்கள் சேவை கழகம் தலைவர் தனது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
கரூரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அப்பாவி பொதுமக்கள் 41 பேர் பலியாகி இருப்பது வேதனை அளிப்பதாக மக்கள் சேவை கழகத்தின் தலைவர் ஜி எம் ஜோதிராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார் தொடர்ந்து பேசி அவர் விஜய் அவர்கள் தொடர்ந்து இரண்டு மாநாடு ஐந்து பொதுக்கூட்டம் நடத்தியுள்ளார் இந்த பொதுக்கூட்டத்தில் பல்லாயிரம் கணக்கான மக்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள் அப்படி இருக்கும் பட்சத்தில் தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்காதது கண்டிக்கத்தக்கதாகும் அது மட்டுமல்ல மக்கள் கூட்டம் அதிகம் வரும் தெரிந்து குறுகிய இடத்தை கொடுத்திருப்பது சந்தேகத்திற்கு இடம் அளிக்கிறது மேலும் பொதுக்கூட்டம் நடைபெறும் போது ஆம்புலன்ஸ் அந்த வழி செல்வதற்கு அனுமதி யார் கொடுத்தார்கள் அப்படி ஒரு நிலைமை அங்கு வரவில்லை இருந்தாலும் ஆம்புலன்ஸ் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பது மிகவும் சந்தேகம் எழுகிறது மேலும் அப்பாவி மக்கள் 41 உயிர் பலியாகி உள்ளது வேதனை அளிக்கிறது எனவே இந்த 41 உயிர்கள் பலியானதற்கு உரிய நீதி விசாரணை வேண்டும் குறிப்பாக சிபிஐ விசாரணை அமைக்க வேண்டும் அப்போதுதான் அங்கு என்ன நடைபெற்றது உண்மை நிலவரம் என்ன என்பது தெரியவரும் எனவே உடனடியாக சிபிஐ விசாரணை அமல்படுத்த வேண்டும் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் மேலும் இதற்கு நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த உத்தரவினை வழங்கிட வேண்டும் என தெரிவித்தார்.


More Stories
‘Drug Free Tamil Nadu 1000 people participated in the Grand human chain rally.
శోభా రాజా నివాసంలో వైభవంగా వరలక్ష్మీ పూజలు
கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?