சென்னை எழும்பூரில் உள்ள ஏஜே சுபைதா மெடிக்கல் சென்டரில் செய்தியாளரை சந்தித்த அகில இந்திய வெளிநாட்டில் மருத்துவம் படித்த டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அமிஜகான் கூறியது ஏழை எளிய மக்களுக்கு குறைந்த செலவில் சிகிச்சை செய்ய ஏஜே சுபைதா மெடிக்கல் சென்டர் விரைவில் இந்த சேவையை தொடங்க உள்ளதாக தெரிவித்தார். மேலும் மருத்துவரளாகிய நாம் நம்மால் முடிந்த உதவிகளை பிறருக்கு உதவி செய்ய முன்வர வேண்டும் ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கு நம்மால் இயன்ற உதவினை செய்ய வேண்டும் அப்போதுதான் நாம் மருத்துவராக இருப்பதற்கு ஒரு சான்றாகும் மேலும் கேரளாவில் சமீபத்தில் மூத்த மருத்துவர்கள் ஏழை எளிய மக்களுக்கு குறைந்த செலவில் அறுவை சிகிச்சை செய்தல் உடல் முழு பரிசோதனை செய்தல் மற்றும் பொதுமக்களுக்கு மருத்துவர் ரீதியான ஆலோசனை வழங்கப்படுதல் போன்ற சிகிச்சைகளை கேரளா மூத்த மருத்துவர்கள் பெருந்தன்மையோடு அவர்கள் பணியாற்றுவது பெரும் மகிழ்ச்சி அதே போல் சென்னையில் ஏஜே சுபைதா மெடிக்கல் சென்டரில் குறைந்த செலவில் மருத்துவ வசதி செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார் மேலும் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே டாக்டர் அப்துல் கலாம் கண்ட கனவினை நினைவாக்குகின்ற வகையில் கடைக்கோடியில் உள்ள கிராம ஏழை எளிய மாணவர்கள் மருத்துவராக முடியும் அதனை உறுதியுடன் மாணவர்கள் செயல்பட வேண்டும் அப்போதுதான் தன்னை பெற்றெடுத்த தாய் தந்தையருக்கு நாம் செய்யும் முக்கிய கடமையாகும் என தெரிவித்தார்.
மருத்துவத்துறையில் தமிழ்நாடு உலக அளவில் மிக சிறப்பாக செயல்படுகிறது என டாக்டர் அமீர்ஜகான் தெரிவித்துள்ளார்


More Stories
Camerry Icecream Turns World Ice Cream Day into a Celebration of Gratitude, Honouring Chennai Police
Over 7,000 Runners Participate in the 15th Edition of the Hexaware Dream Runners Half Marathon 2026
Broadcast Media Cinema Expo (BMCE) 2026 Commences in Chennai