சென்னை, அக்டோபர் 2025: இந்தியாவின் முன்னணி வணிகசெய்தி சேனலான ET NOW, நேயர்களுக்காக புதிதாக South Central மற்றும் The Interview with Ayesha Faridi ஆகிய இருநிகழ்ச்சிகளை அறிமுகம் செய்யவுள்ளது. இது ET NOW-ற்குமேலும் வலு சேர்க்கும். இதில் South Central நிகழ்ச்சியானதுதென் இந்தியாவின் வலிமையான கலாச்சார பொருளாதாரதாக்கத்தை வெளிக்காட்டவுள்ளது. “The Interview with Ayesha Faridi” நிகழ்ச்சியானது இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்தநபர்களின் இயல்பான உரையாடல்களை ஒளிபரப்பவுள்ளது.
இதில் சவுத் சென்ட்ரல் நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 29, 2025 திங்கட்கிழமை முதல் வார நாட்களில் மாலை 5:30 மணி முதல்மாலை 6:00 மணி வரை ஒளிபரப்பாகும். தென்னிந்தியாவின்நாடித்துடிப்பை பிரதிபலிக்கும் விதமாக அர்ப்பணிக்கப்பட்ட இந்தநிகழ்ச்சி, இந்தியாவின் பொருளாதார இயந்திரம் மற்றும்கலாச்சார சக்தியாக இந்தப் பிராந்தியத்தின் பங்கைஎடுத்துக்காட்டும். அத்துடன் இந்தியாவின் எதிர்காலத்திற்கு அதுஏன் முக்கியமானது என்பதை விளக்கும். வணிகம் தளம் முதல்அதிகார மையங்கள் வரை மற்றும் சினிமா முதல் உணவு வகைகள்வரை, இந்த சவுத் சென்ட்ரல் நிகழ்ச்சி பார்வையாளர்களுக்குஐந்து தென் மாநிலங்களின் விரிவான படத்தைக் கொண்டு வந்துசேர்க்கும். நிகழ்ச்சியின் அடிப்படை அம்சங்கள் வணிகம் & பொருளாதாரம், அரசியல் & கொள்கை, சினிமா & கலாச்சாரம்மற்றும் உணவு & வாழ்க்கை முறை ஆகியை இருக்கும்உள்ளடக்கியதாக இருக்கும்.
ET NOW மற்றும் ET NOW Swadesh இன் நிர்வாக ஆசிரியரானAyesha Faridi உடனான நேர்காணல், வெள்ளிக்கிழமை, அக்டோபர் 3, 2025 அன்று பிற்பகல் 3:30 மணிக்குதிரையிடப்படும். இந்த முதன்மை வாராந்திர நிகழ்ச்சியில்வணிகம், சந்தைகள், கொள்கை, விளையாட்டு மற்றும்கலாச்சாரத்தைச் சேர்ந்த முன்னணித் தலைவர்களுடன் 25 நிமிடம்நேர்மையான, ஆழமான உரையாடல்கள் இடம்பெறும். இதுஇந்தியாவின் டிசிஷன் மேக்கர்கள் மற்றும் உலகளாவியபார்வையாளர்களுடன் ஒத்திருக்கும் சிந்தனைகளைவெளிப்படுத்தும் விதமான ஆழமான பார்வைகளை வழங்கும். தினசரி தலைப்புச் செய்திகளின் சத்தத்திற்கு அப்பால்சொல்லப்படாத கதைகள், துணிச்சலான முடிவுகளுக்குப்பின்னால் உள்ள பகுத்தறிவு மற்றும் இந்தியாவின் மிகவும்செல்வாக்கு மிக்க குரல்களிடமிருந்து எதிர்கால உத்திகள் பற்றியநுண்ணறிவுகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சிவடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நிகழ்ச்சிகளின் அறிமுகம் குறித்து Times Network கூறுகையில், ‘South Central’ and ‘The Interview with Ayesha Faridi’, நிகழ்ச்சிகள் மூலம் ET NOW வெறும் தலைப்புசெய்திகளைத் தாண்டி ஆழமான நிகழ்ச்சிகளை தர வேண்டும்என்ற தனது நோக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இந்த இரு நிகழ்ச்சிகளும் கூர்மையான பகுப்பாய்வை ஈர்க்கும்கதைகளுடன் இந்தியாவின் பொருளாதாரம், அரசியல் மற்றும்கலாச்சாரத்தை வடிவமைக்கும் மக்கள் மற்றும் சக்திகள் குறித்தஒப்பிடமுடியாத கண்ணோட்டங்களை பார்வையாளர்களுக்குவழங்குகிறது. டைம்ஸ் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான ET NOW, இந்தியாவின் முதன்மையான ஆங்கில வணிக செய்திசேனலாகும். “Rise with India” என்ற குறிக்கோளுடன்வழிநடத்தப்படும் இந்த சேனல், சந்தைகள் மற்றும் நிதியைத்தாண்டி பொருளாதாரம், கொள்கை மற்றும் மேம்பாடு குறித்தகூர்மையான தகவல்களை 16 நாடுகளில் உள்ளபார்வையாளர்களுக்கு வழங்கி சென்று சேர்க்கிறது.
“The Market”, “First Trades” மற்றும் பிற்பகல் நிகழ்ச்சியான”Closing Trades” போன்ற அதன் பிரத்யேக நிகழ்ச்சிகள் மூலம், ET NOW சந்தையின் மேக்ரோ மற்றும் மைக்ரோ போக்குகள் குறித்தநிபுணர் பகுப்பாய்வை வழங்குகிறது. அத்துடன் சந்தைநுண்ணறிவு மற்றும் தகவலறிந்த முடிவெடுப்பதற்கான நம்பகமானவழிகாட்டியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. இனிஒவ்வொரு வார நாளிலும் மாலை 5:30 மணிக்கு ‘South Central’ மற்றும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பிற்பகல் 3:30 மணிக்கு’The Interview with Ayesha Faridi’ ஆகியவற்றை ET NOW இல்காணுங்கள்.


More Stories
Back-to-School Gets Sweeter as Lotte Choco Pie Teams Up with Mother-Kid Influencers
ஆட்டோரெல்லி நிசான், ஐயப்பந்தாங்கலில் புதிய Nissan Tekton அறிமுகம்
IIMBue 2026 to Convene India’s Top Business Minds to ‘Change the Orbit’ of Leadership