சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை ரோட்டரி மாவட்டம் 3233- சார்பில் ஒய் எம் சி ஏ உடற்கல்வி கல்லூரி இணைந்து ரோட்டரி ஒலிம்பியாட் 2025 நிகழ்ச்சி இன்று 10.10.2025 காலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கௌரவ விருந்தினராக ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3233 மாவட்ட ஆளுநர் ரோட்டரி D. தேவேந்திரன், கல்லூரியின் தாளாளர் ஆசிர் பாண்டியன், கல்லூரி பொறுப்பு முதல்வர் டாக்டர் ஜோதி தயானந்த் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியின் முதன்மை விருந்தினராக இந்திய அரசின் துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வழிகள் அமைச்சகம் மற்றும் சென்னை துறைமுக ஆணையத்தின் துணைத் தலைவர் எஸ், விஸ்வநாதன் ஐ ஏ எஸ் மற்றும் மாண்புமிகு நீதியரசர்திரு. ஏ. டி. ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியினை துவக்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த எஸ் விஸ்வநாதன் ஐஏஎஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ரவி வெங்கடேசன் கூறியது பள்ளிக் குழந்தைகளுக்கு விளையாட்டில் ஆர்வம் ஏற்பட இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதால் அவர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள ஏதுவாக அமையும் அதேபோல் இங்கு வழங்கப்படுகின்ற சான்றிதழ்கள் உயர்கல்வி பயில்வதற்கும் வேலைவாய்ப்பில் சேர்வதற்கும் இது முக்கியத்துவம் அமையும் மேலும் இந்த சான்றிதழ் மூலம் கல்லூரி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும் இந்த விளையாட்டு நிகழ்ச்சியில்1100 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்
மேலும் இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி செயலாளர் சசி, அர்ச்சனா தேவேந்திரன் கல்லூரியில் நிர்வாக அலுவலர் ஜான் சுதர்சன், கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பிற பணியாளர்கள் ஒத்துழைப்பு உடன் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
.


More Stories
FICCI roadshow showcases Chhattisgarh to outside world
Parachute Advansed Unveils Three New Products Crafted for Tamil Nadu’s Evolving Haircare Needs
The Power of the Stick: Why Bite-Sized Snacking Is Winning Over Young Consumers