எழுத்தாளர் திரைப்பட பாடல் ஆசிரியர் திருமதி உமா சுப்பிரமணியன் அவர்களின் இணையர் திரு சொ சுப்பிரமணியன் அவர்களின் மணிவிழா 60 மற்றும் உமா சுப்பிரமணியன் அவர்கள் எழுதியுள்ள மகளின் மகள் கவிதை நூல் வெளியீட்டு விழா, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் அருகே உள்ள அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு திரைப்படப் பாடல் ஆசிரியர் முன்னாள் அரசவை கவிஞர் முன்னாள் சட்டமன்ற மேலவை உறுப்பினரர் திரு முத்துலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, பேராசிரியர் காரைக்குடி திரு எஸ் லோகநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
திரைப்பட இயக்குனர் எஸ்.பி முத்துராமன் அவர்கள் முன்னிலை வகுத்தார்.
இதனைத் தொடர்ந்து பாடலாசிரியர் உமா சுப்பிரமணியன் அவர்கள் எழுதியுள்ள மகளின் மகள் கவிதை நூலினை, மேலான் கூடுதல் காவல் துறை இயக்குனர் இருப்பு பாதை தமிழ்நாடு வனிதா ஐபிஎஸ் அவர்கள் நூல் வெளியிட, வீரபாண்டிய கட்டபொம்மன் மக்கள் முன்னேற்ற இயக்கத்தின் நிறுவனத் தலைவர் லயன் டாக்டர் இளைய கட்டபொம்மன் அவர்கள் நூலினை பெற்றுக் கொண்டார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் இயக்குனரும் நடிகருமான கே பாக்யராஜ், சென்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம், மனிதநேயர் செவாலியே கலைமாமணி டாக்டர் வி ஜி சந்தோசம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி கே எஸ் இளங்கோவன், திரைப்பட பாடல் ஆசிரியர் பேராசிரியர் மு மேத்தா, கவிஞர் திரு காசி முத்து மாணிக்கம், அதிமுக செய்தி தொடர்பாளர் ஆவடி குமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட கலந்து கொண்டு, எழுத்தாளர் திரைப்பட பாடல் ஆசிரியர் திருமதி உமா சுப்பிரமணியன் அவர்களின் இணையர் திரு சொ சுப்பிரமணியன் அவர்களின் மணிவிழா 60 காணம் அவர்களை வாழ்த்துவது பெரும் மகிழ்ச்சி.
திருமதி உமா சுப்பிரமணியன் அவர்கள் எழுதியுள்ள மகளின் மகள் கவிதை நூலுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்வதோடு ஒரு பெண்ணாக துணிச்சலோடு பல்வேறு போராட்டங்களை சந்தித்து இந்த நிலைக்கு வரும் அவர்களுக்கு பாராட்டு தெரிவிப்பது மட்டுமல்லாமல், அவர் இன்னும் பல பாடல்கள் எழுத வேண்டும், பல நூல்களைப் படைக்க வேண்டும், அதற்கு அவருடைய கணவர் திரு சுப்பிரமணியன் அவர்கள் எப்போதும் உறுதுணையாக இருப்பார்.
திருமதி உமா சுப்பிரமணியன் அவர்கள் ஒரு சாதனை பெண்மணியாக உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டுமென மனதார வாழ்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


More Stories
Camerry Icecream Turns World Ice Cream Day into a Celebration of Gratitude, Honouring Chennai Police
Over 7,000 Runners Participate in the 15th Edition of the Hexaware Dream Runners Half Marathon 2026
Broadcast Media Cinema Expo (BMCE) 2026 Commences in Chennai