மத்திய பிரதேசம் போபால் மாவட்டம் T.T. நகர் டாட்யா டோப் விளையாட்டு மைதானத்தில் தேசிய அளவிலான இலகு பந்து போட்டி 26-10-2025முதல் 30-10-2025வரை நடைபெற்றது. அதில் தமிழ்நாடு, மத்தியபிரதேசம், ஆந்திரப்பிரதேசம்,தெலுங்கானா, உத்திரப்பிரதேசம், உத்திர காண்ட், ஒடிஷா, டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடக உட்பட இதரமாநிலங்களில் இருந்து விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினார்கள்
இப்போோட்டியில் தமிழக அணி
சப்ஜினியர் பெண்கள் -முதல் இடம்,
சப் ஜினியர் ஆண்கள் -இரண்டாம் இடம்,
சப்ஜினியர் கலப்புபிரிவு- இரண்டாம் இடம்,
ஜுனியர் கலப்புபரிவு- முதல் இடம்
கலப்பு பிரிவு CBSE
அணி-மூன்றாம் இடம்
ஜுனியர் பெண்கள் அணி -மூன்றாம் இடம்
பிடித்து சாதனைகள் படைத்தனர்.
இவர்கள் கோப்பைகளை பெற்று நவம்பர் 2 தேதி சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் வந்தபோது அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரயில் நிலையத்தில் 66விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் தங்க ஜெபா, ஆலன்,ஸ்டீபன்ராஜ். பெண்கள் அணிமேலாளர் இலக்கியா,இயன் முறை மருத்துவர் மாளவிகா, திவ்யா. தமிழக நடுவர்கள் கிறிஸ்டோபர், கபிலன் ராஜ்,அன்பரசு ஆகியோர்களுக்கு திரைப்பட துணை இயக்குனர் கார்த்திக் சாமிநாதன் அவர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர்.
தொடர்ந்து செய்தியாளரை சந்தித்து தமிழக இலகு பந்து சங்க செயலாளர் சதீஷ்குமார் கூறுகையில் இந்த சாதனை எங்களுக்கு மறக்க முடியாதது, போனாலும் அரசு எங்களுக்கு அடுத்த சாதனைகளுக்கு உதவி செய்துவிட வேண்டும் நாங்கள் இதுபோன்று உலக சாதனைகளை படைக்க அரசு உதவிட வேண்டும், மேலும் தங்கப்பதக்கம் வெல்கின்ற வீரர்களுக்கு தமிழக அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என கூறினார்.
மேலும் இந்த நிகழ்வில் சங்கத்தின் தலைவர் கார்த்திக்வேல் மாறன், தமிழகத்தின் இலகு பந்து கழக தொழில்நுட்ப மேலாளர் ஜமால் ஷெரிப், பொருளாளர் இளவரசன் ஆகியோர் இப் போட்டிகளை வென்றெடுக்க உரு துணையாக சிறப்பான முறையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.


More Stories
AMPA SKYONE MALL HOSTS “MAGICAL VOICES & VIBES” CELEBRATING INCLUSIVE MUSICAL TALENT
Chennai Teen Nisha Sasikumar Becomes Youngest Woman in the World to Summit Mount Everest from Nepal Side
మరపురాని మహామనిషి …ఎన్టీఆర్ -తమ్మినేని బాబు వ్యాఖ్య