சென்னை, நவம்பர் 2025: அப்போலோ ஹாஸ்பிடல்ஸ்குழுமத்தின், துல்லிய ஆயுர்வேத மருத்துவமனைகள்சங்கிலியான அப்போலோ ஆயுர்வைட் ஹாஸ்பிடல்ஸ், சென்னை, கிரீம்ஸ் சாலையில் அதன் முதன்மை 35-படுக்கைகொண்ட மருத்துவமனையின் துவக்கத்தை இன்றுஅறிவித்தது. அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் என்டெர்ப்ரைஸ்லிமிடெட் இன் நிர்வாக துணைத் தலைவர் டாக்டர் ப்ரீதாரெட்டி மற்றும் அப்போலோ ஆயுர்வைட் ஹாஸ்பிடல்ஸ் இன்நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. ராஜிவ்வாசுதேவன் ஆகியோர் முன்னிலையில் அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் குழுமத்தின் நிறுவனர்-தலைவர் டாக்டர்ப்ரதாப் C. ரெட்டி அவர்களால் இந்த வசதி திறந்துவைக்கப்பட்டது.
இந்தத் துவக்கம், சென்னையின் உடல்நலப் பராமரிப்புசூழலின் ஒரு விரிவாக்கத்தைக் காட்டிலும் பெரியதொருமுக்கியத்துவத்தைக் குறிக்கிறது. இது, இந்தியாவின்முழுமையான சுகாதார அணுகுமுறையில் ஒரு புதியஅத்தியாயத்தை குறிக்கிறது.1983-ல் அப்போலோ உடல்நலசிகிச்சை வழங்கலை மறுவரையறை செய்த கிரீம்ஸ்சாலையில் இருந்து, நவீன மருத்துவத்துடன் இணக்கமாகசெயல்படும் ஒரு கூடுதல் அறிவியலாக ஆயுர்வேதத்தைவலுப்படுத்துவதன் மூலம், இப்போது அப்போலோ ஆயுர்வைட் அந்த மரபை மேலும் நீட்டிக்கிறது.
எலும்பியல், நரம்பியல் மற்றும் நரம்பு சிதைவு கோளாறுகள், வளர்சிதை மாற்றக் கோளாறுகள், பெண்கள் ஆரோக்கியம், குழந்தைகளின் வளர்ச்சிக் கோளாறுகள், முதியோர்பராமரிப்பு, குத-மலக்குடல் நோய்களுக்கான ஆயுர்வேதபாரா-சர்ஜிக்கல் சிகிச்சைகள், நாள்பட்ட காயங்கள், விளையாட்டு மருத்துவம், தோல் நோயியல் மருத்துவம்மற்றும் சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட ஒரு பரந்ததொகுப்பின் சிறப்புப் பிரிவுகளில் ஆதார அடிப்படையிலானஆயுர்வேத சிகிச்சையை வழங்குவதற்காக இந்தப் புதியவசதி வடிவமைக்கப்பட்டுள்ளது.
அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் குழுமத்தின்நிறுவனர்–தலைவர் டாக்டர் ப்ரதாப் C. ரெட்டி அவர்கள்கூறுகையில்,”இந்தியாவின் மனிதகுலத்திற்கு அளித்த மிகச்சிறந்த பரிசுகளில் ஒன்று ஆயுர்வேதம். அப்போலோ வில், துல்லியம், ஆதாரம் மற்றும் நோயாளி பாதுகாப்புஆகியவற்றுடன் சிகிச்சை செய்யப்படும் போது, ஆயுர்வேதம்நோய்களின் மூல காரணங்களை நிவர்த்தி செய்வதன்மூலமும், நல்வாழ்வை மேம்படுத்துவதன் மூலமும் நவீனமருத்துவத்தை நிறைவு செய்கிறது என்று நாங்கள்நம்புகிறோம். அப்போலோ ஆயுர்வைட் ஹாஸ்பிடல்ஸ் மூலம், இரு துறைகளின் சிறந்த அம்சங்களையும் ஒன்றிணைக்கும்முழுமையான, நோயாளி-மைய்யப்படுத்தப்பட்ட உடல்நலப்பராமரிப்பில் இந்தியாவின் தலைமைப் பங்கை நாங்கள்வலுப்படுத்துகிறோம். மீட்பு, நோயெதிர்ப்புத் திறன் மற்றும்வாழ்நாள் முழுவதுமான ஆரோக்கியத்தை ஆதரிக்கும்உயர்தர, ஆராய்ச்சி-வழிகாட்டிய ஆயுர்வேத சிகிச்சைக்குஇந்தப் புதிய மையம் ஒரு வழிகாட்டியாக செயல்படும் எனநாங்கள் உறுதியாக நம்புகிறோம்.”என்று கூறினார்.
அப்போலோ அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் என்டெர்ப்ரைஸ்லிமிடெட் இன் நிர்வாக துணைத் தலைவர் மற்றும்அப்போலோ ஆயுர்வைட் இன் தலைவர் டாக்டர் ப்ரீதாரெட்டி அவர்கள் கூறுகையில், “அப்போலோ வில், உடல்நலப் பராமரிப்பு முழுமையானதாக இருக்க வேண்டும்மற்றும் ஒவ்வொரு நோயாளியின் தேவைகளை மையமாகக்கொண்டிருக்க வேண்டும் என்று நாங்கள் எப்போதும்நம்பியுள்ளோம். அப்போலோ ஆயுர்வைட்
மூலம், மருத்துவ ரீதியாக நிர்வகிக்கப்பட்ட, ஆதார-அடிப்படையிலான ஆயுர்வேதத்தை நவீனமருத்துவத்துடன் இணைக்கின்றோம். இது குணமடைதலைமேம்படுத்துகிறது, மன-உடல் சமநிலையை மீட்டெடுக்கிறது, மற்றும் வாழ்நாள் முழுவதுமான நல்வாழ்வைஊக்குவிக்கிறது. அனைத்து நான்கு தென்னிந்தியமாநிலங்கள், புது தில்லி, அல்மோரா ஆகிய பகுதிகளில் ஒருவலுவான இருப்பைக் கொண்டுள்ள அப்போலோ ஆயுர்வைட்ஹாஸ்பிடல்ஸ் , மேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில்விரைவில் தொடங்கவிருக்கும் கிளைகளுடன், துல்லியமானஆயுர்வேதம் மற்றும் முழுமையான குணப்படுத்துதலுக்கானஇந்தியாவின் மிக முன்னணி வலையமைப்பைத் தொடர்ந்துஅமைத்து வருகின்றன.”என்றார்.
அப்போலோ ஆயுர்வைட் ஹாஸ்பிடல்ஸ் நிறுவனத்தின்நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. ராஜீவ்வாசுதேவன் கூறும்பொழுது, “சென்னையில் எங்கள்முதன்மை மருத்துவமனை தொடங்கப்பட்டது எங்கள்இரண்டு தசாப்த கால பயணத்தில் ஒரு முக்கியமானதிருப்புமுனையைக் குறிக்கிறது. இந்தியாவின் சுகாதாரசிறப்பின் மையமான கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள இந்தமையம், ஆயுர்வேதத்தின் துல்லியத்தையும் அப்போலோ வின்மருத்துவ அமைப்புகளின் அறிவியல் துல்லியத்தையும்ஒன்றாகக் கொண்டுவருகிறது. மூல காரண நோயறிதல்மற்றும் சிக்கலான தொற்றாத நோய்களுக்கான சிகிச்சை, நோய்க்குப் பிந்தைய தீவிர மறுசீரமைப்பு மற்றும் முழு நபர்ஆரோக்கியம் ஆகியவற்றின் மூலம் தனிப்பயனாக்கப்பட்டபராமரிப்பை வழங்க நாங்கள் உறுதிப்பாட்டுடன் உள்ளோம். முழுமையான குணமாகுதலை நாடும் ஒவ்வொரு நபருக்கும்உயர்தர, பாதுகாப்பான மற்றும் விளைவு சார்ந்த ஆயுர்வேதபராமரிப்பை அணுகக்கூடியதாக மாற்றுவதே எங்கள்குறிக்கோள் ஆகும்.” என்றார்.
பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கானஅப்போலோ வின் உறுதிப்பாட்டிற்கு இணங்க, இந்தமருத்துவமனை பாரம்பரிய ஆயுர்வேத மருந்துகள், மருத்துவஉணவுகள் மற்றும் OTC சூத்திரங்கள் உள்ளிட்ட’சோதிக்கப்பட்ட பாதுகாப்பான’ ஆயுர்வைட் தயாரிப்புகளின்வரம்பையும் வழங்கும். ஒவ்வொரு தயாரிப்பும்
கடுமையான தர சோதனைக்கு உட்படுகிறது, மேலும்லேபிளில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம்நுகர்வோர் பாதுகாப்பு அறிக்கைகளை நிகழ்நேரத்தில்சரிபார்க்கலாம். பெண்களின் ஆரோக்கியம், குழந்தைநல்வாழ்வு, முதியோர் பராமரிப்பு, வலி மேலாண்மை, தூக்கம், மன அழுத்தம் மற்றும் தோல் ஆரோக்கியம் போன்ற பல்வேறுதேவைகளை இந்த வரம்பு பூர்த்தி செய்கிறது.


More Stories
Rainbow Hospitals Brings To City ‘One Of Its Kind’ Holistic Maternal Care Clinic For Recurrent Pregnancy Loss – “Vannam”
MGM Group Hospitals Pioneer Next-gen Cell-based Immunotherapy, Offer New Hope in Advanced CancerCare
Kauvery Group Launches Dedicated GI Bleed Centres Across Tamil Nadu