தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அனைத்து ஊழியர்கள் சங்கம் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அனைத்து ஊழியர்கள் சங்க மாநில தலைவர் ஜே. வாலன்றின் பிரிட்டோ தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
பள்ளிக் கல்வித்துறையில் 20ஆண்டுகளாக மேலாக வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் தொடர்ந்து முழு நேரம் பணி புரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்திட கோரியும் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதியை தமிழ்நாடு அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அனைத்து ஊழியர்கள் சங்கம் சார்பில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் இருந்து முழு நேரமாக அலுவலக பணி செய்யும் தொகுப்பூதிய பணியாளர்கள் தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அனைத்து ஊழியர்கள் சங்க மாநில மாவட்ட வட்டார நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு பணி நிரந்தரம் செய்யகோரி கோஷம் முழங்கி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.


More Stories
கிங் மேக்கரின் முப்பெரும் விழா 20 ஆண்டுகள் நிறைவு செய்து 21வது ஆண்டில் அடி எடுத்துவைக்கிறது
AMPA SKYONE MALL HOSTS “MAGICAL VOICES & VIBES” CELEBRATING INCLUSIVE MUSICAL TALENT
Chennai Teen Nisha Sasikumar Becomes Youngest Woman in the World to Summit Mount Everest from Nepal Side