சென்னை எழும்பூர் இக்சா மைய வளகத்தில் தமிழ்நாடு NGO கவுன்சிலின் மாநில அளவிலான ஆலோசனை மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு மாநில முழுவதும் இருந்து 38 மாவட்டNGOக்கல் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் NGO கவுன்சில் அமைப்பு உருவாக்கி அதனை அறிவிக்கப்பட்டது.
மாநில தலைவராக கணேசன்,மாநில பொதுச் செயலாளராக சண்முகம், மாநில பொருளாளராக சேவியர் வல்லபராஜ், மாநில துணைத் தலைவர்களாக குமார், கமலக்கண்ணன், மாநில துணைச் செயலாளர்களாக தனக் கேசவ மூர்த்தி, செல்வி ஆகியோர் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப் பட்டனர்.அதனைத்தொடர்ந்து மாநிலச் செயற்குழு நடந்தபின்னர் 21 உறுப்பினர்கள் நியமிக்கப் படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைப்பின் மாநில தலைவர் கணேசன் அவர்கள் கூறியது மாநில அளவில் இருந்து இந்த அமைப்பினை உருவாக்கி அதன் மூலம்
இளைஞர்கள் மற்றும் மகளிர்கள் வேலைவாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் மேம்படுத்த அரசுடன் இணைந்து தங்களுடைய அமைப்பின் மூலம் நாங்கள் செயல்படுவோம்.
எங்களுடைய அமைப்பு மூலம் தேர்தல்களில் 100% வாக்களிக்க அனைத்து வகையிலும் முன் நின்று செயல்படுவோம் என தெரிவித்தார்.
மேலும் மாநில அரசின் திட்டங்களை கிராமப்புற மக்களிடம் கொண்டு சேர்ப்பது தன்னார்வ தென்டு நிறுவனம் மட்டும் தான்.
எங்களுடைய அமைப்பின் மூலம் திண்டுக்கலில் மகளிர்பஞ்சாயத்து ராஜ்மாநாடு-2025, இந்த நவம்பர் மாதம் அல்லது, அடுத்த மாதம் டிசம்பர் நடத்துவது என்று இக்கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்தார்
மேலும் இக்கூட்டத்தில் என் ஜி ஓ பல்வேறு மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


More Stories
‘Drug Free Tamil Nadu 1000 people participated in the Grand human chain rally.
శోభా రాజా నివాసంలో వైభవంగా వరలక్ష్మీ పూజలు
கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?