சென்னை துறைமுகம் நிர்வாக அலுவலகத்துக்கு முன்பாக சென்னை துறைமுகம் ஓய்வு பெற்ற அதிகாரிகள் நல சங்க சார்பில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஓய்வு பெற்ற அதிகாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..
இந்த தர்ணா போராட்டத்தில் 65 வயதிலிருந்து 85 வயதுக்குட்பட்ட அதிகாரிகள் 50க்கும் மேற்பட்டோர் காலை முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..
*இதைக் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை துறைமுகம் ஓய்வு பெற்ற அதிகாரிகள் நல சங்கத்தின் நிர்வாகிகள் கூறியது
இந்த தர்ணா போராட்டத்தின் முக்கிய அம்ச கோரிக்கையாக மத்திய அரசு மூன்றாம் மற்றும் நான்காம் நிலை ஊழியர்களுக்கு ஐந்து வருடத்திற்கு ஒருமுறை சம்பளம் உயர்த்தி கொடுத்து ஒன்றாம் மற்றும் இரண்டாம் நிலை உயிர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பளம் உயர்த்தி தருவதால் ஒன்றாம் நிலை இருக்கக்கூடிய ஊழியர்களை விட மூன்றாம் நான்காம் நிலையில் உள்ள ஊழியர்கள் அதிக சம்பளம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் இதை உடனடியாக மாற்ற வேண்டும்..
விடப்பட்ட சிறப்பு ஊதியத்தை 17.5% ஓய்வு பெற்ற மற்றும் பணியில் இருக்கும் அதிகாரிகளுக்கு 2017 முதல் அடிப்படை ஊதியம் ஓய்வு ஊதியத்துடன் இணைக்க வேண்டும் என்று இந்தக் கோரிக்கை பல ஆண்டுகளாக ipa மற்றும் அமைச்சகத்திலும் நிலுவையில் உள்ளது இதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்
துறைமுக அதிகாரிகளுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை 2022 முதல் மூன்றாம் மற்றும் நான்காம் நிலை ஊழியர்களுக்கு இணையாக திருத்தி அமைக்க வேண்டும்..
சென்னை துறைமுகம் மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பாத ஓய்வூதியர்களுக்கு மருத்துவப் பதிவு மாதம் 1000ரூபாயில் இருந்து 2000 ரூபாய் மூன்றாம் மற்றும் நான்காம் நிலை ஊழியர்களுக்கு இணையாக வழங்க வேண்டும்..
கொரோனா காலக்கட்டு காலத்தில் மூடப்பட்ட அகவிலைப்படியை மூன்று மட்டும் நான்காம் நிலை ஊழியர்களுக்கு அளிக்கும் போது எங்களுக்கும் வழங்க வேண்டும்..
எங்களது கோரிக்கையை உடனே அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் இல்லை என்றால் எங்கள் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி செல்வோம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்
இடம்:சென்னை துறைமுகம் அலுவலகம்


More Stories
‘Drug Free Tamil Nadu 1000 people participated in the Grand human chain rally.
శోభా రాజా నివాసంలో వైభవంగా వరలక్ష్మీ పూజలు
கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?