SKPD & Charities சார்பில் சென்னை சூலையில் உள்ள மகாரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியின் 11 ஆம் ஆண்டு விழா பள்ளியின் தாளாளர் டி வி ராம குமார் அவர்களின் தலைமையில் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக லைப் லைன் மருத்துவமனையின் துணை நிர்வாக இயக்குனர் டாக்டர் அனிருத் ராஜ்குமார் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.
மேலும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் மாணவ மாணவிகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு அதில் முதல் இரண்டாம் இடம் மூன்றாம் இடம் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவித்தனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளரிடம் தெரிவித்த டாக்டர் அனிருத் அவர்கள் கூறியது மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டுப் போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் நம்முடைய தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்ல இந்திய தேசத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என மாணவர்களை ஊக்கி விக்கும் வகையில் தெரிவித்தார். மேலும் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் மிகச் சிறப்பான முறையில் மாணவர்களை வழிநடத்தி அவர்களின் லட்சியத்தை நிறைவேற்றுகின்ற வகையில் இவர்களுடைய செயல்பாடு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மேலும் மொழி இனம் பாராமல் அனைவரும் வியக்கும் வகையில் மாணவர்களின் எதிர்பார்ப்பு பிரம்மிக்க வைத்தனர் .
மேலும் இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் பி. சுப்பிரமணியம் மேனேஜர் ஸ்ரீ லதா, SKPD & Charities ட்ரஸ்டீஸ் தேசு லட்சுமி நாராயணா எஸ் எல் சுதர்சனம் சி ஆர் கிஷோர் பாபு தாத்தா பத்ரிநாத் உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


More Stories
Camerry Icecream Turns World Ice Cream Day into a Celebration of Gratitude, Honouring Chennai Police
Over 7,000 Runners Participate in the 15th Edition of the Hexaware Dream Runners Half Marathon 2026
Broadcast Media Cinema Expo (BMCE) 2026 Commences in Chennai