விவசாயிகளின் பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இருந்து எல்ஜி கார்டன் வரை அகில இந்திய விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பேரணி – மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் தலைவர் கோவிந்தராசு தலைமை தாங்கினார்.
மேலும் இந்த பேரணியில் அகில இந்திய துணைத் தலைவர் நாகம்மாள், எஸ் கே எம் ஒருங்கிணைப்பாளர்
பாலகிருஷ்ணன், மாநிலச்செயலாளர் சுருளியாண்டவர், தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் கொளத்தூர் த.ரவி ஆகியோர் கலந்துகொண்டு விவசாயிகளின் பிரச்சினை பற்றி எடுத்துரைத்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் கூறும்போது வைகை, சோத்துப்பாறை, மஞ்சளாறு உபரிநீரை பயன்படுத்தவத்தல்குண்டு- ஏழு வனம்பட்டி சுற்றி 18 கிராம பகுதிகளுக்கு கிளை கால்வாய் அமைத்திட வேண்டும்.
வத்தலகுண்டு -எழுவனம்பட்டி விவசாய நிலங்களை பாழாக்கும் சரவணா சாயப்பட்டறைக்கு தடை விதிக்க வேண்டும்.
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடும், வழங்க வேண்டும் தொடர்ந்து விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் மழையினாலும் அதிக வரச்சினாலும் விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன எனவே பயிர்களுக்கு அரசு காப்பீடு மூலம் இழுப்பிடு வழங்க வேண்டும்.
மின்மசோதா 2022திரும்பப்பெற வேண்டும். அதேபோல்
விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக்கப்பட வேண்டும்.
நீர்நிலைகளை தூர்வாரி பாசனவடிக்கால் வசதிகளை உருவாக்கும் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்.மகாத்மா காந்தி ஊரக வேலை நாட்களை 200 நாட்களாக மாற்றி அமைக்க அரசு முன்வர வேண்டும். என தெரிவித்தனர்.
இந்த மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் வத்தலகுண்டு வெரியப்ப நாயக்கன்பட்டி வாஞ்சிநாதன், புதுக்கோட்டை
ஆவுடையார் கோயில் ஒன்றிய பொருளாளர் மதியழகன், தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை அருண்குமார் உள்ளிட்ட சங்கத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் மற்றும் விவசாய பெருமக்கள் 1000க்கும் மேற்பட்டோர் இப்பேரணி- ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.


More Stories
Camerry Icecream Turns World Ice Cream Day into a Celebration of Gratitude, Honouring Chennai Police
Over 7,000 Runners Participate in the 15th Edition of the Hexaware Dream Runners Half Marathon 2026
Broadcast Media Cinema Expo (BMCE) 2026 Commences in Chennai