March 7, 2026

டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் அவர்களுக்கு நாம் எப்போதும் நன்றி கடன் பட்டிருக்க வேண்டும் எம். அருள்மணி அரசு தெரிவித்துள்ளார்.

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை அசோக்நகரில் உள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு ஜெய் பீம் அனைத்து இந்தியா ஐ ஓ பி எஸ் சி எஸ் டி பணியாளர்கள் நலச் சங்க பொதுச் செயலாளர் எம் அருள்மணி அரசு அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் சட்ட மாமேதை பாரத ரத்னா டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்களின் 69 வது நினைவு நாளை முன்னிட்டு நாடு முழுவதும் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது நம்முடைய சட்ட மாமேதை டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்கள் இந்திய தேசத்தின் அடையாளமாகவும் நம் நாடும் நம் சமூகமும் அனைத்து சமூகத்தையும் உள்ளடக்கிய ஒரு சிறந்த மூத்த முன்னோடியையும், இந்திய அரசியலமைப்பின் கட்டிடக் கலைஞரையும், ஒரு அறிவுஜீவியையும், ஒரு சமூக சீர்திருத்த வாதியுமான இந்த நாட்டின் மிகப் பெரும் தலைவர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் இயற்றிய சட்ட முன் வடிவினை இந்திய தேசம் மட்டுமல்ல உலக நாடுகள் பாராட்டுத்தக்க வகையில் அவருடைய செயல்பாடுகள் கொள்கை கோட்பாடு அனைவரையும் காக்கும் கரங்களாக சட்டத்தினை செயல்படுத்தி காட்டியவர் நம்முடைய டாக்டர் அம்பேத்கர் அவர்கள் விளங்குகிறார் அவர் மறைந்தாலும் அவர்கள் இயற்றிய சட்ட திட்டங்கள் இவ்வுலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும் அதனை நாம் அனைவரும் பின்பற்றி செயலாற்ற வேண்டும், அது மட்டுமல்ல அவர்களுக்கு நாம் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருக்க வேண்டும். சமூகத்தின் மேம்பாட்டுக்கும் ஏழை மக்களின் நலனுக்காகவும் ஒருவருக்கொருவர் உதவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். டாக்டர் பி ஆர் அம்பேத்கர் இந்திய சமூக சீர்திருத்தவாதி, பொருளாதார நிபணர், அரசியல்வாதி, சட்ட நிபுணர். இவர் இந்திய அரசியல் அமைப்பின் முக்கிய வடிவமைப்பாளர். சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர். பெண்கள் உரிமைகளுக்காக போராடியவர் பௌத்த மதத்தை தழுவியவர் பாபா சாகேப் என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். மேலும் இவரது பணிகள் சமூக நீதி,சுதந்திரம்,சமத்துவம்,சகோதரத்துவம்ஆகியவற்றை மையமாக கொண்டுள்ளது.கல்வி,பொருளாதார முன்னேற்றமாக அவர் பணிகள் சிறந்தன. டாக்டர் அம்பேத்கர் இந்திய வரலாற்றில் சமத்துவம் மனிதநேயம் சமூக நீதி ஆகியவற்றின் சின்னமாக போற்றப்படுகிறார். ஜெய் பீம் அனைத்து இந்திய ஐஓபி எஸ் சி எஸ் டி பணியாளர்கள் நலச் சங்கம் சார்பில் புகழாரம் சூட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.நிகழ்ச்சியில் இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைகழக துணை இயக்குனர் திரு.பீம்ராவ் மற்றும் சங்கத்தின் துணை பொதுச்செயலாளர் திரு.கே.பாலாஜி,திரு.கதிர்வேல் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

About Author