இந்திய பாராளுமன்றத்தில் திமுக ராஜசபா எம்பி உயர்திரு .திருச்சி சிவா அவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் வேலு நாச்சியார் மருது சகோதரர்கள் ஆகியோரின் புகழை 265 ஆண்டுகளுக்கு பிறகு நாடறிய ,உலகம் அறிய செய்ததற்கு வீரபாண்டிய கட்டபொம்மன் மக்கள் முன்னேற்ற இயக்கம் சார்பாக தங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக திரு இளைய கட்டபொம்மன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒன்றிய அரசிடம் பல வருடங்களாக இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் , தீரன் சின்னமலை வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோர் பெயரில் இந்தியாவில் தயாரிக்க கூடிய போர் ஆயுதங்களுக்கு ( Brahmos,Agni , Prithvi missile) போன்று பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம், ஆனால் பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஒன்றிய அரசு இதை கண்டு கொள்ளாமல் இருப்பது வரலாற்றை மறைப்பது ஒன்றாகும்
மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள் தேச ஒற்றுமையை வலியுறுத்தி பேசிய பிறகாவது ஒன்றிய அரசு இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நம்புகிறோம்.
மருது சகோதரர்கள் , வீரபாண்டிய கட்டொம்மன் வ.உ.சிதம்பரனார் மற்றும் பல தேச விடுதலை போராட்ட வீரர்களுக்கு சிலை மற்றும் பள்ளி ,கல்லூரி பாடத்திட்ட புத்தகங்களில் இடம்பெற செய்து திராவிட மாடல் திமுக அரசு பெருமை சேர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது . என இளைய கட்டபொம்மன் தெரிவித்துள்ளார்.


More Stories
‘Drug Free Tamil Nadu 1000 people participated in the Grand human chain rally.
శోభా రాజా నివాసంలో వైభవంగా వరలక్ష్మీ పూజలు
கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?