பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு மாநில மையம் சார்பில் கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது.
13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை புதுப்பேட்டை எல்ஜி கார்டன் இருந்து எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை அரசின் கவன ஈர்ப்பு மாபெரும் பேரணி நடைபெற்றது.
மேலும் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பொள்ளாச்சி க. பாலசுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இப் பேரணிக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநிலத் தலைவர் மு. பொன்னி வளவன் பேரணியை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இந்த மாபெரும் கவனயீர்ப்பு பேரணி நிகழ்வில் சேலம் வி குமரேசன் ஆர் சார்லஸ் கே வாசுதேவன் கே ரவி சி செல்லப்பாண்டி சி. ராஜு ஆகியோர் இப்பேரணிக்கு முன்னிலை வகுத்தனர் . அதனை தொடர்ந்து தலைமை ஒருங்கிணைப்பாளர் பொள்ளாச்சி க. பாலசுப்ரமணியம் செய்தியாளர்களிடம் கூறுகளில் கிராம ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்களுக்குதேர்வுநிலை சிறப்பு ஊதியத்தை அரசு கருவூலம் மூலம் வழங்க வேண்டும்.
கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை காவலர்களுக்கு மாத சம்பளமாக ரூ10000/- வாங்கிட வேண்டும்.
கிராம ஊராட்சியில் பணியாற்றி வரும் கிராம ஊக்குனர்களுக்கு மாத சம்பளம்ரூ.2000/- இருந்துரூ.10000/-ஆக உயர்த்திட வேண்டும்.
ஓய்வு பெற்ற ஊராட்சி செயலாளர்களுக்கு மாதம் ரூபாய் 10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
கிராம ஊராட்சியில் பணிபுரியும் கணினி இயக்குனர்களுக்கு மாத ஊதியம் வழங்கிட வேண்டும்.
தமிழகத்தில் உள்ளபெரிய ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து புதியஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கிட வேண்டும், அதேபோல்
பெரியகிராம ஊராட்சிகளை
பிரித்து புதிய ஊராட்சிகளை உருவாக்கிட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகள் அரசு செயல்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து எங்களுடைய கோரிக்கைகளை அரசு தவிர்க்கும் பட்சத்தில் அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைத்து மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெறும் என கூறினார்.
இந்த மாபெரும் கவன ஈர்ப்பு பேரணியில் சேலம் வி குமரேசன் தலைமை துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.ரங்கராஜ், மதுரை ஆர்.சார்லஸ், காஞ்சிபுரம் கே. வாசுதேவன், ராமநாதபுரம்கே.ரவி,மதுரைசி.செல்லப்பாண்டி, பொள்ளாச்சி சி.சாஜிஉட்படகூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்
கலந்து கொண்டனர்.
மேலும் நிகழ்ச்சியின் த. ஊ. செ. சங்கமாநில செயல் தலைவர் புதுவை ஏ. மணிராஜ் நன்றி உரை வழங்கினார்.


More Stories
பல்லாவரத்தில் அதிமுகவினர் இடையே கோஷ்டி மோததால் பரப்பரப்பு.
JVS ARUMUGAM Submits Expression of Interest to Contest from Nellithope Constituency
மக்களின் சிரமங்களை தென்னக ரயில்வே துறை பொருட் படுத்தவில்லை- எஸ் ஆர் எம் யூ பொதுச் செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.