Chennai: சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள கண்மலை விசுவாச ஆசீர்வாத சபையில் கிறிஸ்மஸ் பெருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.
ஆண்டவர் இயேசுகிறிஸ்து பிறப்பை பற்றி பேராயர் கூறுகையில் இயேசு கிறிஸ்து அவதரித்த திருநாள் தான் கிறிஸ்துமஸ் பெருவிழாவாக கொண்டாடப் படுகிறது.
மேலும் இந்த நன்னாளில் முதியவர், விதவைகள், மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட ஏழை எளிய மக்களுக்கு நலதிட்ட உதவிகள் மற்றும் சுமார் 300 நபர்களுக்கு கடந்த25 வருடங்களாக கிறிஸ்மஸ் பெருவிழா முன்னிட்டு அசைவ உணவு வழங்கப்பட்டது.
இந்த திருச்சபையின் மிக முக்கிய நோக்கமானது இப்பொழுது கல்வியில் பின்தங்கியுள்ள குழந்தைகள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு கல்வி பயில அனைத்து வகைகளிலும் இந்த திருச்சபை மூலம் பல்வேறு உதவிகள் செய்யப்பட்ட வருவதாக தெரிவித்தார் மேலும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கல்வித்தரத்திற்கு உதவுகின்ற வகையில் இன்னும் பல இந்த திருச்சபை மூலம் உதவிகள் செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்தார்
மேலும் இயேசுகிறிஸ்து அவதரித்த இந்த நாளில் நாடு நலம் பெற மற்றும் 2026நடைபெறஉள்ள சட்டமன்ற தேர்தலில் யார் வரவேண்டும் யார் முதலமைச்சராக வந்தால் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நல்லது செய்வார்கள் என்று உணர்ந்து அனைவரும் சிந்தித்து தமிழகத்தின் முதலமைச்சரை தேர்ந்தெடுக்க வேண்டும் என தெரிவித்தார். இந்த நிகழ்வில் திருத்த பெருமக்கள் மற்றும் தேவாலயத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


More Stories
பல்லாவரத்தில் அதிமுகவினர் இடையே கோஷ்டி மோததால் பரப்பரப்பு.
JVS ARUMUGAM Submits Expression of Interest to Contest from Nellithope Constituency
மக்களின் சிரமங்களை தென்னக ரயில்வே துறை பொருட் படுத்தவில்லை- எஸ் ஆர் எம் யூ பொதுச் செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.