சென்னை கேகே நகரில் மனோன்மணி சிவலிங்கம் அறக்கட்டளை மூன்றாம் ஆண்டு விழா முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா மற்றும் புத்தாண்டு முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா நிகழ்ச்சி மனோன்மணி சிவலிங்கம் அறக்கட்டளை தலைவரும், பாஜக தென் சென்னை மாவட்ட செயலாளருமான எஸ். பாக்யராஜ் அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவி மற்றும் அன்னதானம் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கூறியது மரியாதைக்குரிய பாக்யராஜ் அவர்கள் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மனோன்மணி சிவலிங்கம் அறக்கட்டளை மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வருவது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.
மேலும் தேசிய ஒற்றுமைக்கு அசுத்தலை ஏற்படுத்தும் விதமாக தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் மீது கொடூர தாக்குதல் திமுக ஆட்சியில் நடத்தபட்டு வருகிறது, இது போன்ற சூழ்நிலையை தவித்திட நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும்.
பாஜக தமிழகத்தில் வளர்ந்துள்ளது. இந்திய கூட்டணி மிகப்பெரிய குழப்பத்தில் உள்ளது. இந்தகூட்டணி சட்டமன்றத் தேர்தல் வரைதொடருமா? என்பது மிகப்பெரிய குழப்பம். தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ளகட்சிகள் அடிமைகளாக உள்ளது. தமிழ்நாட்டில் நாள்தோறும் நடக்கின்ற பிரச்சனைகள் பற்றி அவர்கள் கவலைப்படு வதில்லை. உண்மையான விடியல் வரவேண்டும் என்றால் இரட்டை இலை
உடன் தாமரை மலர வேண்டும் அப்போதுதான் தமிழ்நாட்டிற்கு முழுமையான விடியல் வரும் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன், பாஜக மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன், தென் சென்னை மாவட்ட தலைவர் ஈ. சஞ்சீவி, மத்திய அரசு நலத்திட்ட உதவி பிரிவின் மாநில தலைவர் மயிலை சி. ராஜா மற்றும் பாஜக மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.


More Stories
‘Drug Free Tamil Nadu 1000 people participated in the Grand human chain rally.
శోభా రాజా నివాసంలో వైభవంగా వరలక్ష్మీ పూజలు
கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?