சென்னை வள்ளுவர் கோட்டம் அன்னைதெரசா வளாகம் வாயிலின் அருகில் தமிழ்நாடு மாநில ஊராக வாழ்வாதார இயக்கம் மற்றும் அனைத்து பணியாளர் நல சங்கத்தின் சார்பில் பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக பெருந்திறள் காத்திருப்பு போராட்டம் தங்கத்தின் மாநில தலைவர் பி ஜெகதீஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த சங்கத்தின் மாநில தலைவர் பி ஜெகதீஸ்வரி அவர்கள் கூறுகையில் அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பது நாங்கள் தான், ஆனால் எங்களுடைய கோரிக்கைகளை துறையின் அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும்கோரிக்கை மனு அளித்தும் எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரவில்லை, எனவே எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை அரசு ஏற்று நிறைவேற்ற வேண்டும் என பெருந்திறள் முறையீடு காத்திருப்பு போராட்டம் நடத்துகிறோம் என கூறினார்.
மேலும் எங்களுடைய முக்கிய கோரிக்கையான
தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் நகர்புற பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் செய்யப்படும் பணி புதுப்பித்தல் முறையை கைவிட்டு பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் பணியாளர்களுக்குஅடிப்படை ஊதியஉயர்வு உடனடியாக வழங்க வேண்டும்.
அரசு திட்டநிதியிலிருந்து bookkeeper,CST,CRP(P&C)CRP(FARM) ஆகியோருக்கு மாதாந்திர மதிப்பூதியமாக ரூ. 7500/- வழங்கிட வேண்டும்
பணிக்காலத்தில் இறந்த பணியாளர்கள் குடும்பத்திற்கு முறையாக இழுப்பீடு தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்தார்.
இந்தப் பெருந்தரள் கண்டன போராட்டத்திற்கு மாநில நிர்வாகிகளும், தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 3000க்கும் மேற்பட்ட மகளிர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மேலும் இந்த போராட்டத்தில் சங்கத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


More Stories
பல்லாவரத்தில் அதிமுகவினர் இடையே கோஷ்டி மோததால் பரப்பரப்பு.
JVS ARUMUGAM Submits Expression of Interest to Contest from Nellithope Constituency
மக்களின் சிரமங்களை தென்னக ரயில்வே துறை பொருட் படுத்தவில்லை- எஸ் ஆர் எம் யூ பொதுச் செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.