காட்டங்குளத்தூர், 04 பிப்ரவரி 2026: உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்கும் புகழ்பெற்ற ‘சர்வதேச கணித மாதிரியாக்கப் போட்டியில்’ (MCM 2026), பங்கேற்பதன் மூலம் எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவன (SRMIST) மாணவர்கள் உலகஅரங்கில் தங்களது திறமையை பதிவு செய்திருக்கின்றனர்.
இளங்கலை மாணவர்கள் நிஜ உலகப் பிரச்சனைகளுக்கு கணித மாதிரிகள் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை மூலம் தீர்வுகளைக் கண்டறிவதற்கு அமெரிக்காவின் COMAP அமைப்பால் நடத்தப்படும் எம்சிஎம் போட்டி, ஜனவரி 29 முதல் பிப்ரவரி 2 வரை நடைபெற்றது.
கடந்த 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில், உலக அளவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 27,000-க்கும் மேற்பட்ட குழுக்கள் பங்கேற்றன. இது சர்வேத கல்வி சமூகத்திற்குள்இப்போட்டியின் உலகளாவிய முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
சவால்கள் நிறைந்த இப்போட்டியில் போட்டியில், SRMIST-யிலிருந்து 17 மாணவர்களை உள்ளடக்கிய 6 குழுக்கள் பங்கேற்றுள்ளன. இதன் மூலம் இந்தியாவிலிருந்து அதிக மாணவர்களை இப்போட்டிக்கு அனுப்பிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாக SRMIST திகழ்கிறது. ஸ்மார்ட்போன் பேட்டரி பயன்பாடு, விண்வெளி மின்தூக்கி அமைப்புகளைப்பயன்படுத்துவதன் மூலம் நிலவில் காலனி அமைத்தல், சிறப்பானசெயல்திறனுக்காக விளையாட்டுகள் மீதான பகுப்பாய்வு,செயலற்ற சூரிய நிழல் உத்திகள் மற்றும் செயற்கை நுண்ணறிவின் (AI) பொறுப்பான பயன்பாடு போன்ற தங்கள் தீர்வுகளை எஸ்ஆர்எம் பல்கலை மாணவர்கள் இப்போட்டியில்சமர்ப்பித்திருக்கின்றனர்.
இது குறித்து கனடாவின் சாஸ்காட்செவன் பல்கலைக்கழகப் பேராசிரியரும், SRMIST-ன் கௌரவப் பேராசிரியருமான ராஜ் சீனிவாசன் கூறுகையில், “எஸ்ஆர்எம் மாணவர்களின் இந்தப் பங்கேற்பு அவர்களின் ஆக்கபூர்வமான சிந்தனை மற்றும் சிக்கல்களைத் தீர்க்கும் திறனைப் பிரதிபலிக்கிறது. ஆயிரக்கணக்கான சர்வதேச குழுக்களுக்கு இணையாகப் போட்டியிடுவது மாணவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும்,” என தெரிவித்தார்.
இப்போட்டியில் பங்கேற்பதன் மூலம் மாணவர்களுக்கு சர்வதேச அங்கீகாரம், கல்வி உதவித்தொகை மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகள் கிடைப்பதுடன், அவர்களின் எதிர்காலத் தொழில்முறை வாய்ப்புகளும் மேம்படும். எம்சிஎம் போட்டியில்இம்மாணவர்களின் பங்கேற்பு, சிக்கலான சூழல்களுக்கு தீர்வுகாண கணித கருத்தாக்கங்களைப் பயன்படுத்துவதில்அவர்களின் சிறப்பான திறனை வெளிப்படுத்துகிறது.
எம்சிஎம் போட்டியின் முடிவுகள் 2026 மே மாதம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


More Stories
Vedantu Students from Tamil Nadu Deliver Historic NEET UG 2026 Results with 360+ Selections Across the State
Rajalakshmi Engineering College Creates World Record at AI NEXUS 2026 TN AI Minister Applauds Historic Student Achievement
நீட் யுஜி 2026 தேர்வில் அகில இந்தியதரவரிசை (AIR) 92-ஐப் பெற்று ஈரோடு நகரஅளவில் ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ்லிமிடெட்