March 7, 2026

பதிவு மூப்பு பட்டம் மற்றும் பட்டய பொறியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் நீதிமன்ற உத்தரவினை அமல்படுத்த கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பதிவு மூப்பு பட்டம் மற்றும் பட்டய பொறியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலத் தலைவர் பொறியாளர் வி. சிவகுமார் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் சங்கத்தின் மாநில தலைவர் சிவகுமார் அவர்கள் செய்தியாளரிடம் கூறுகையில் எங்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் 2014இல் தொடர்ந்து நீதிமன்ற தீர்ப்பினை செயல்படுத்தாமல், நீதிமன்ற தீர்ப்பைகளைப் புறந்தள்ளி எங்களின் வாழ்வாதாரத்திற்கும், முன்னேற்றத்திற்கும் தடையாக செயல்பட்டு வரும் மின்வாரிய உச்சபட்ச சட்டவிரோத போக்கின் உண்மை தன்மையை தமிழக அரசுஆய்வு செய்ய வேண்டும்.

மின்வாரியத்தின் சட்ட விரோத போக்கை தடுத்து நிறுத்த வேண்டிய தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் அவர்களின் அலட்சிய போக்கினை கண்டிப்பதாகவும்

மேலும் இதைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் தமிழகஅரசு இதற்கு விரைவில் நல்ல முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் எங்களுடைய நியாயமான கோரிக்கை தமிழக அரசு ஏற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

என்ன கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர். பொறியாளர் ஏ செந்தில்குமார், மாநில பொருளாளர் பொறியாளர் அலெக்ஸ் டேவிட் சன் உட்பட சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இந்த கண்டன போராட்டத்தில் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

About Author