June 5, 2026

ஆழ்வார் ஆச்சாரியர் மந்திரம் ஜகதாச்சார்யா1000 மெமரபல் சபா சார்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் அமைகிறது

சென்னை அருகிலுள்ள திருவள்ளூர் மாவட்டம் மணவூரில் உள்ள பழையனூர் கிராமத்தில் 12 ஆழ்வார்களுடன் ஆழ்வார் ஆச்சாரியார் மந்திரம் கட்டும் பணி ஜகதாச்சார்யா 1000 மெமரபல் சபா சார்பாக தொடங்கப்பட்டது.

இதன் ஆலோசனைக் கூட்டம் சென்னை புதுப்பேட்டையில் உள்ள நாதமுனி அரங்கத்தில்
சபாவின் ஸ்தாபகர் திரு.ஊசூரு நந்தகுமார் அவர்கள் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

தொடர்ந்து செய்தியாளரிடம் தெரிவித்த ஸ்தாபகர் நந்தகுமார் கூறியது, உலகத்திலேயே முதல் முறையாக 12 ஆழ்வார்களுக்கும் கோவில் திருமலா என கூறப்படும் நான்கு பெருமாள்களுக்கும், ஆச்சார்யர்கள் இராமானுஜர், மணவாள மாமுனிகளுக்கு தனித்தனி சன்னதிகளும்,பரமபத வாசல் சன்னதியுடன் 19 சன்னதிகள் கூடிய திவ்யதேசமாக ஆழ்வார் ஆச்சாரியர் மந்திரம் இங்கு அமைகிறது என தெரிவித்தார்.
மேலும் தற்போது ஐந்து சன்னதிகள் கட்டுமான பணி தொடங்கி, முடிக்கப்பட்டது.
அதன் பிறகு ஐந்து சன்னதிகள் எட்டு அடி உயரம் எழுப்ப கட்டுமான பணி தொடங்கப்பட்டது.முதன் முதலில் அரங்கநாதன் சுவாமி சன்னதி கட்டுமான பணி முடிக்க எட்டு அடி உயரம் எழுப்பி இன்றைய தினம் காங்கிரீட் போட்டு முடிக்கப்பட்டது.ஐந்து சன்னதிகள் விரைவில் முடிக்க தொழில் முனைவர்கள், தொண்டு அறங்காவலர்கள் அனைவரும் கூடி பேச்சு வார்த்தை நடைபெற்றது.
இன்றைய தினம் சந்திப்பில் கோபுரம் குங்குமம் மற்றும் பூசு மஞ்சள்தூள் உரிமையாளர் திரு.Y.V.ஹரிகிருஷ்ணா அவர்களும்,தலைமை விருந்தினராக அஜந்தா பாக்கு தூள் உரிமையாளர் திரு.K.சங்கரராவ் அவர்களும், கெளரவ விருந்தினராக பிரேம் பார்மா ஏஜன்சி உரிமையாளர் திரு.B.L.குமாரவேல் அவர்களும் மற்றும் அத்தங்கி பத்ரி நாராயணன் ரஞ்சனி தம்பதியினர்,முக்கால பாஷ்யகார்லு வைஜயந்தி தம்பதியினர், சுதாகர் விமலாக்கர் தம்பதியினர்,திரு.K.K.திரிநாத் குமார் அவர்கள்,C. இராஜேந்திரா அவர்கள் ,திரு. S.சுரேஷ்பாபு அவர்கள், திரு.G.நடராஜன் அவர்கள்,திரு.கீதாபிரசாத் அவர்கள் ,திரு.R.B.பாலசுப்ரமணியம் அவர்கள்,திரு.கிருஷ்ணகுமார் அவர்கள் கலந்து கொண்டனர்.கோபுரம் குங்குமம் மற்றும் பூசு மஞ்சள்தூள் தொழில் தொடங்கி 80 ஆண்டுகள் நிறைவடைந்ததால் திரு.Y.V.ஹரிகிருஷ்ணா அவர்களுக்கு சால்வை போர்த்தி நினைவு சின்னத்தை ஜகதாசார்யா 1000 மெமரபல் சபாஸ்தாபகர் திரு.ஊசூரு நந்தகுமார் அவர்கள் வழங்கினார். இந்த விழாவின் ஒப்பனையை திரு.பேர்ல பத்ரி நாராயணன் அவர்கள் நடத்தினார்.ஜகதாசார்யா 1000 மெமரபல் சபா அறங்காவலர்கள் திரு.உம்மிடி இராஜேஷ் அவர்கள்,திரு.அத்தங்கி பத்ரி நாராயணன் அவர்கள்,திரு.கண்டசாலா பாலாஜி பிரசாத் அவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்ட ஏற்பாடுகளை ஜகதாசார்யா 1000 மெமரபல் சபா ஸ்தாபககர்கள் திரு.ஊசூரு நந்தகுமார், திருமதி ஊசூரு லதா அவர்கள் சிறப்பாக நடத்தி வைத்தினர்.இன்றைய தினம் கூட்டம் புது ப்பேட்டையில் உள்ள நாதமுனி ஹாலில் நடைப்பெற்று.கூட்டத்திற்க்கு வந்த அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

About Author