கோடைவெயிலின் தாக்கம் கருதி காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட 109வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சியை திருமதி சுகன்யா செல்வம் அவர்கள் திறந்து வைத்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கராத்தே ஆர் செல்வம் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுசெயலாளர் ஜிகே தாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கினார்கள்.
மேலும் கோடை வெயிலின் தாக்கம் கருதி ஒவ்வொரு ஆண்டும் 109வது வார்டு சார்பில் மாமன்ற உறுப்பினர் திருமதி சுகன்யா செல்வம் அவர்கள் ஏற்பாட்டில் நீர்மோர் மற்றும் இளநீர் தர்பூசனை குளிர்பானங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அந்த வகையில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ள நிலையில் மக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர் தர்பூசணி இளநீர் குளிர்பானங்கள் மாமன்ற உறுப்பினர் திருமதி சுகன்யா செல்வம் அவர்கள் வழங்கினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் வட்ட தலைவர்கள் நெல்சன் பிரீட்ஸ் மோகன் அமிர்தராஜ் சையத் சிவகுமார் சுந்தர் மற்றும் விக்டர் பாஸ்கர் அஜிலேஷ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி சார்ந்தவர்கள் பீமா வள்ளி உள்ளிட்ட மாநில மாவட்ட பகுதி வட்டக் கழக நிர்வாகிகள் துப்புரவு பணியாளர்கள் பொதுமக்கள் என மக்கள் திரளாக கலந்து கொண்டனர்


More Stories
‘Drug Free Tamil Nadu 1000 people participated in the Grand human chain rally.
శోభా రాజా నివాసంలో వైభవంగా వరలక్ష్మీ పూజలు
கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?