சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நல சங்கத்தின் சுழற்சி Iமற்றும் சுழற்சி II சார்பில் மாநிலபொதுச் செயலாளர் Dr.வி.கே.அருணகிரி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியது புதிதாக பதிவியேற்றுள்ள தமிழக முதல்வருக்கும்,
அமைச்சர் மற்றும் சட்டமன்ற
உறுப்பினர்களுக்கும் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தெரிவித்துக் கொண்டார்.
அதனை தொடர்ந்து பேசுகையில் கடந்த
ஆட்சியில் நடைபெற்ற TRB தேர்வில்
அதிகாரிகள் மூலம் துறையில் முறைகேடு நடந்துள்ளது. எனவே தேர்வினை ரத்து செய்து நியாயமான முறையில் மறுத்தேர்வு நடத்தப்பட வேண்டும்.
கௌரவ விரிவுரையாளர்களுக்கு மே மாத சம்பளம் உடனடியாக வழங்க வேண்டும், மேலும் பள்ளியில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு, கௌரவ
விரிவுரையாளர்களுக்கும் கடந்த மே மாதம் முதல் சம்பளம் வேண்டும் என்ற கோப்பினை முன்னாள் நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் ஐஏஎஸ் பள்ளிக்கல்விக்கு மட்டும் அனுமதி அளித்து, எங்கள் கோப்பை ரத்து செய்து விட்டார். எனவே தமிழக முதல்வர் பள்ளிபகுதிநேர ஆசிரியர்கள் போல் எங்களுக்கும் சம்பளம் வழங்கிட ஆணை
வழங்கிட வேண்டும்.
முனைவர் பட்ட நுழைவுத் தேர்வில் தோல்வி
அடைந்த திருமதி. சுந்தரவல்லி ஐஏஎஸ்
அவர்களை கல்லூரி கல்வி ஆணையர்
பொறுப்பில் இருந்து விடுவித்து பணி மூப்பு கொண்ட கல்லூரி முதல்வர்களை அந்தப் பதவியில் நியமிக்க வேண்டும்.
UGC பரிந்துரை செய்த ஊதியம்ரூ.57,600/-
அனைத்து விரிவுரையாளர்களுக்கும் வழங்க வேண்டும்
5 ஆண்டுகளுக்கு மேல் பணி புரியும் கௌரவ விரிவுரையாளர்களின் பணியினை நிரந்தர செய்ய வெளியிடப்பட்ட அரசாணை எண் 56 ஐ
உடனேநடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்
இந்த செய்தியாளர் சந்திப்பில் மாநிலத்துணைத் தலைவர்
Dr.வசந்தகுமார், சென்னை மண்டல தலைவர்Dr. சீனிவாசன், தர்மபுரிமண்டலதலைவர் Dr.கிருபாகரன், செயலாளர்Dr.கண்ணன்,திருவண்ணாமலை மாவட்டதுணைதலைவர் Dr.சதீஷ், திருச்சி மண்டல தலைவர் Dr.வேலு, புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
Dr.பச்சமுத்து, ஆத்தூர் கிளை செயலாளர் Dr. சிவகுமார் உட்பட சங்க நிர்வாகிகள்
செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.


More Stories
‘Drug Free Tamil Nadu 1000 people participated in the Grand human chain rally.
శోభా రాజా నివాసంలో వైభవంగా వరలక్ష్మీ పూజలు
கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?