June 5, 2026

BUSINESS BRILLIANCE AWARDS 2026 தொழில் முனைவோர் மற்றும் வணிகத் தலைவர்களை கொண்டாடும் சிறப்பு விழா

தொழில் உலகில் சிறந்து விளங்கும் முன்னோடி தொழில் முனைவோர், புதுமையாளர்கள் மற்றும் வணிகத் தலைவர்களை கௌரவிக்கும் நோக்கில் Business Brilliance Awards 2026 விழா மிக விமர்சையாக நடைபெற உள்ளது.

இந்த விருது வழங்கும் விழா, தங்கள் துறைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கியவர்களை பாராட்டுவதற்கான ஒரு உயர்நிலை தளம் ஆகும். மேலும், இந்த நிகழ்வு வெற்றி பெற்ற வணிக உரிமையாளர்கள், ஸ்டார்ட்அப் நிறுவுநர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முறை நிபுணர்கள் ஒன்றிணையும் ஒரு முக்கிய சந்திப்பாக அமையும்.

இந்த நிகழ்வில், வருமான வரித்துறை (IRS) அதிகாரியான நந்தகுமார் அவர்கள் சிறப்பு பங்கேற்பாளராக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்கிறார்.

மேலும், சிறப்பு விருந்தினர்களாக
அத்விக் அமித் குமார் (Zozo Connect),
விஜய் (விளாக்கர்),
M Productions மதன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை மேலும் சிறப்பிக்க உள்ளனர்.

நிகழ்ச்சி சிறப்பம்சங்கள்:

  • 50-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் மற்றும் வணிகத் தலைவர்கள் பங்கேற்பு
  • உயர்தர நெட்வொர்க்கிங் (Networking) வாய்ப்பு
  • முன்னணி தொழில் தலைவர்களின் ஊக்கமூட்டும் வெற்றிக் கதைகள்

இந்த நிகழ்ச்சி, புதிய தொடர்புகளை உருவாக்கவும், வணிக வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை கண்டறியவும், ஊக்கமூட்டும் அனுபவத்தை பெறவும் ஒரு சிறந்த தளமாக இருக்கும்.

About Author