December 17, 2024

Chennai Boy P.SIDDHARTH achieves world record in snake cube blind folded

ருபிக் கியூப விளையாட்டு

அறிமுகம்: ஸ்னேக் கியூப விளையாட்டு மரத்தினால் செய்யப்பட்ட பாம்பு போல் உள்ள வடிவத்தை கியூப வடிவில் கொண்டு வர வேண்டும். இந்த விளையாட்டில் 2.36 நொடிகளில் உலக சாதனை செய்தவர், லெம்-கை-மீ

புதிய சாதனை:

செல்வன் பி. சித்தார்த் இப்புதிர் சாதனையை கண்களை கட்டிக்கொண்டு விளையாடி 2.1 நொடிகளில் அதிவேகமாக தீர்வு கண்டு புதிய உலக சாதனை செய்து உள்ளார்

சாதனையின் பெயரும் விளக்கமும்: சிறுவன் பி. சித்தார்த் இந்தியாவின் தமிழ்நாட்டு மாநிலத்தை சார்ந்தவர். மரத்தால் ஆன ஸ்னேக் கியூப புதிர் விளையாட்டை கண்களை கட்டிக்கொண்டு மிக துரிதமாக விளையாடி 2.1 நொடிகளில் தீர்வு கண்டு புதிய உலக சாதனையை படைத்தான். 06- 06-2023 அன்று இச்சிறுவன் சாதனை படைத்துள்ளான் என உறுதி செய்யப்பட்டபோது அவனது வயது 13 ஆண்டுகள் இரண்டு நாட்கள்.

இவனது சாதனை பின்வரும் மன்றங்களில் அங்கீகரிக்கப்பட்டது

இன்ஜீனியஸ் சார்ம் வேர்ல்ட் ரெகார்டஸ்

ஏசியா புக் ஆப் ரெகார்ட்ஸ்

இந்தியா புக் ஆப் ரெகார்டஸ்

*இன்டர்நேஷனல் அச்சிவெர்ஸ் புக் ஆப் ரெகார்ட்ஸ்

இந்த சாதனைகளை கல்வி அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனிப்பட்ட முறையில் பாராட்டியுள்ளார்.

உலக ஜின்னஸ் புத்தகத்தில் ஒரு நிமிடத்திற்குள் 3X3 கியூப் விளையாட்டை தீர்வு கண்ட அதிகபட்ச நபர்களில் இச்சிறுவனும் இடம் பிடித்துள்ளான்.

அது மட்டும் இன்றி 3×3, 2×2, பிரமிக்ஸ் மெகாமிக்ஸ் போன்ற பல கியூப் விளையாட்டுகளில் ஒரு நிமிடத்தில் தீர்வு காண்பதில் தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் அதிக அளவில் விருதுகள் பெற்றுள்ளார்.

சித்தார்த் குறித்து:

சிறுவன் பி சித்தார்த் (13 வயது ). இவரது பெற்றோர் பிரதிக் & ராதா. இவர் சென்னை பப்ளிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறார். இவர் தமிழ்நாடு கியூப அசோசியேஷன் (Tamil Nadu Cube Association TNCA) கிராண்ட் மாஸ்டர் ஆனந்த் ராஜேந்திரன் என்பவரிடம் பயிற்சி எடுத்துக் கொள்கிறான். இவ் விளையாட்டின் மீதுள்ள அதீத விருப்பமும் ஆர்வமுமே இவரை ஒரே வருடத்திற்குள் உலக சாதனைகளையும், முறியடித்து புதிய சாதனைகளை படைக்க முடிந்தது. எதிர்காலத்தில் அவர் கியூப விளையாட்டில் பிரபலமடைந்து புகழ்பெற வேண்டும் என்பதே இவரது விருப்பம்.

சர்வதேச அளவில் கியூப விளையாட்டிற்கு இந்திய நாட்டின் சார்பாக, போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பதே இவரது இலட்சியம்.

ரூபிக் கியூப விளையாட்டுக்கு மற்ற நாடுகள் போல் இந்தியாவும் அதிக ஆர்வத்தோடு அங்கீகரிக்க வேண்டும். இதனை நம் நாட்டின் அனைத்து ஊடகங்களும் துணைபுரிந்து ஊக்கமளித்து பிரபலப்படுத்த வேண்டும்.

இந்த சமர்ப்பணம் மூலம் இவ் விளையாட்டின் விழிப்புணர்வை வருங்கால தலைமுறையினருக்கு ஏற்படுத்த விரும்புகிறோம். இந்நிகழ்வை பகிர்வதன் மூலம் இவ்விளையாட்டை பரப்பி மாபெரும் வெற்றி அடைய செய்வதற்கு, தங்களது முழு ஒத்துழைப்பை வேண்டுகிறோம்

About Author