December 19, 2024

Dr.கலாம் இலவச கல்வி மையம் & Dr.ஜெயசந்திரன் சாரிடபுள் டிரஸ்ட் இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாம்

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை தர்மராஜா கோயில் தெருவில் உள்ள டாக்டர் கலாம் இலவச கல்வி மையம் மற்றும் டாக்டர் ஜெயசந்திரன் சாரிடபுள் டிரஸ்ட் இணைந்து மாபெரும் இலவச பொது மருத்துவ முகாமினை நடத்தினர்.பிரபல மருத்துவர்கள் பங்கேற்று நடத்திய முகாமில் சிறப்பு மருத்துவ பிரிவுகள்,இலவச மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றது.

இம்மருத்துவ முகாமில் பொதுமருத்துவம்,இரத்த அழுத்தம்,சர்கரை நோய் மருத்துவம்,இ.சி.ஜி,அக்கு பஞ்சர்,பிசியோ தெரபி,தோல் மருத்துவம்,பல் மருத்துவம்,கண் மருத்துவம்,மகப்பேறு மருத்துவம்,சித்த மருத்துவம் போன்ற மருத்துவங்கள் சிறந்த மதுத்துவர்களால் மருத்துவம் பார்க்கபட்டு இலவசமாக மருந்துகள் வழங்கபட்டது.இம்முகாமினை டாக்டர் கலாம் இலவச கல்வி மையம் நிர்வாக குழுவினர் மற்றும் நண்பர்கள் இணைந்து நடத்தினர்.மருத்துவ முகாமில் பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் வருகைதந்து பயண்பெற்றனர்.

About Author