December 25, 2024

Youth Awareness Rally on Women Safety in Cyber World – Greater Chennai Police /ICWO

சென்னை பெரு நகர காவல்துறை மற்றும் இந்திய சமூக நல அமைப்பு சார்பில்
சைபர் உலகில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி!
எழும்பூர்:சென்னை பெரு நகர காவல்துறை மற்றும் இந்திய சமூக நல அமைப்பு சார்பில்
சைபர் உலகில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் அரங்கில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர்
சந்தீப் ராய் ரத்தோர் ஐ.பி.எஸ். அவர்கள் தலைமையில்
கொடி அசைத்து விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். மேலும் சுவரொட்டி வெளியீடு மற்றும் உறுதி மொழி ஏற்பு நடைப்பெற்றது.
மேலும் இந்நிகழ்வில் சென்னை பெரு நகர காவல் துணை ஆணையர் முனைவர் வனிதா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இந்திய சமுதாய நல அமைப்பின் நிறுவன செயலாளர் ஹரிஹரன் மற்றும் காவல் ஆய்வாளர் பார்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்நிகழ்வில் காவல் உயர் அதிகாரிகள், துணை ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் சென்னையில் உள்ள 10க்கும் மேற்பட்ட கல்லூரியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துக்கொண்டனர்

About Author