January 24, 2025

அன்னை வேளாங்கண்ணி திருத்தலம் பெசன்ட் நகர், சென்னை 50ஆம் ஆண்டு நிறைவு திருவிழா 2023

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணித் திருத்தல வரலாற்றில் 2023 ஆம் ஆண்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 1972ல் எளிமையாய் எழுப்பபட்ட இத்திருத்தலம் இன்று சென்னை நகரத்தின் அடையாளமாகவும் கிறிஸ்தவர்களும் பிற சமய சகோதர சகோதரிகளுக்கும் ஆசீரை வாரி வழங்குகின்ற புனிதத் தலமாக மாறி தனது 50 வது ஆண்டில் அடியெடுத்துவைக்கின்றது.

சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணித் திருத்தலத்தின் 50வது ஆண்டுத் திருவிழா வருகின்ற ஆகஸ்ட் 29ஆம் நாள் செவ்வாய் முதல் செப்டம்பர் 8ஆம் நாள் வெள்ளி வரை நடைபெறவுள்ளது. இப்பதினொரு நாள் விழாக் கொண்டாட்டத்தின் துவக்கமாக ஆகஸ்ட் 29ஆம் நாள் செவ்வாய்கிழமை மாலை 5.45 மணிக்கு, அன்னையின் திருவுருவம் தாங்கிய 12 அடி நீளமுள்ள திருக்கொடியானது பவனியாகக் கொண்டுவரப்பட்டு அர்ச்சிக்கப்பட்ட பின் திருத்தல வளாகத்தில் உள்ள 75 அடி உயரக் கொடிக்கம்பத்தில் சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் மேதகு டாக்டர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களால் ஏற்றிவைக்கப்படும்.

ஒவ்வொரு ஆண்டுத் திருவிழாவும் ஒரு மையக் கருத்தின் அடிப்படையில் கொண்டாடப்படும். அகில உலக திருஅவையானது கடந்த 2021ல் இருந்து கூட்டொருங்கியக்க திருஅவை என்ற மையக்கருத்தை தியானிக்கின்ற வேளையில், இப்பொன்விழா ஆண்டை அன்னை மரியா நம் பயணத்தின் வழித்துணை என்ற மையக் கருத்தில் கொண்டாட உள்ளோம். இறை அழைத்தல் தினம், இளையோர் தினம், பக்த சபைகள் தினம், நற்கருணை தினம், உழைப்பாளர்கள் தினம், ஆசிரியர்கள் தினம், குடும்ப தினம், நலம்பெறும் தினம், அன்னையின் பிறப்பு பெருவிழா என ஒவ்வொரு நாளும் சிறப்பு தினங்களாகக் கொண்டாடப்படும். இறைவனின் அன்பும் இரக்கமும் அன்னையின் பக்தர்கள் நிறைவாய்ப் பெற்றிட திருவிழாவின் நாட்களில் சிறப்புத் திருப்பலிகளும் செப வழிபாடுகளும் காலையில் இருந்து இத்திருவிழா மாலை வரை நடைபெறும். சிறப்பு நவநாட்களில் மாலை 5.30 மணி திருப்பலி முடிவில் அன்னையின் தேர்பவனியும் நடைபெறும்.

செப்டம்பர் 7ஆம் உயர்மறைமாவட்டப் நாள் மாலை 5.30 மணிக்கு பேராயர் மேதகு டாக்டர் சென்னை மயிலை ஜார்ஜ் அவர்களின் தலைமையில் ஏனைய உயர்மறைமாவட்ட குருக்களோடு இணைந்து கூட்டுத் திருப்பலியும், அதனைத்தொடர்ந்து ஆரோக்கிய அன்னையின் ஆடம்பரத் அந்தோணிசாமி தேர்பவனியும் நடைபெறும். செப்டம்பர் 8ம் தேதி அன்னையின் பிறந்ததாளும், திருத்தலத்தின் 50ம் ஆண்டு விழாத் தொடக்கமும் கொண்டாடப்படும். அன்று விடியற்காலை 3.30 மணி முதல் மாலை 5.00 திருப்பலிகள் நடைபெறும். காலை 7.45 மணி ஆங்கிலத் திருப்பலி முடிவிலும், IT60060 9.30 மணி வரை தொடர்ந்துமணி தமிழ் திருப்பலிக்கு முன்பும் அன்னைக்கு முடிசூட்டுவிழா நடைபெறும். மாலை 5.30 மணி திருப்பலியைத் தொடர்ந்து கொடியிறக்கம் நடைபெறும்.

1972ம் ஆண்டு, அருட்தந்தை. P.T. Arulappa அவர்களால் துவங்கப்பட்ட இத்திருத்தலம், இன்று பல்வேறு தேவைகளோடும் சுமைகளோடும் நோய்களோடும் வாடுகின்ற பல்லாயிரக்கணக்கான அன்னையின் பக்தர்களுக்கு உடல் விடுதலையும் மனநிறைவும் அளிக்கின்ற அன்னையின் இல்லமாக இத்திருத்தலம் திகழ்கின்றது. அன்னை மரியாள் மீது மக்கள் வைத்துள்ள அன்பும் நம்பிக்கையும் மதங்களுக்கு அப்பாற்பட்டது என்பதற்கு இங்கு பெருந்திரளான பக்தர்களே சான்று. வரும்

இவ்வாண்டுத் திருவிழாவிலும் அன்னைக்கு நன்றி செலுத்த இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. வெகு விமரிசையாக மிகப்பெரும் அளவில் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களின் முழுப் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு நமது சென்னை மாநகர காவல் துறையினர் பல முன்னேற்பாடுகளையும் திட்டங்களையும் மேற்கொள்கின்றார்கள். சென்னையில் பல்வேறு இடங்களிலிருந்து நம் அன்னையின் திருத்தலத்திற்கு வருகைபுரிய பெசன்ட் நகருக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க மாநகரப் போக்குவரத்துதறை ஏற்பாடு செய்துள்ளது. திருத்தல அதிபர் மற்றும் பங்குத் தந்தை அருட்திரு. வின்சென்ட் சின்னதுரை தலைமையில் திருத்தல தந்தையர்கள், ஏனைய அருட்தந்தையர்கள், 350 தன்னார்வத் தொண்டர்கள், பங்கு மக்கள் அனைவரும் இணைந்து இப்பெருவிழாவை சிறப்பாகவும் என் அர்த்தமுள்ள விதத்திலும் கொண்டாட உழைக்கின்றார்கள்.

மேலும் கலைநயமிக்க எழில்மிகு பேராலயம் கடந்த டிசம்பர் 8 ஆம் நாள் 202160 சென்னை மயிலை பேராயர் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது ஆரோக்கியத் தாயின் புகழுக்கு சிறப்பு சேர்த்து இப்பொன்விழா ஆண்டிற்கு மணிமகுடமாய் திகழ்கின்றது.

சாதி மத பேதமின்றி சமய நல்லிணக்கத்தோடும் நாம் அனைவரும் ஆரோக்கியத் தாயின் அன்புப் பிள்ளைகள் என்ற உணர்வோடும் இத்திருவிழா நாட்களில் வருகைபுரியும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னையின் ஆசீர் நிறைவாய்ப் பெற வேண்டி உங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கின்றோம்.

அனைவருக்கும் இறையாசீர், மரியே வாழ்க!

SHR

அன்னையின் அரவணைப்பில்

அருட்திரு. வின்சென்ட் சின்னதுரை திருத்தல் அதிபர் & பங்குத்தந்தை

About Author