December 23, 2024

அருள்மிகு மரகதாம்பாள் சமேத மல்லிகேஸ்வரர் திருக்கோயில்பஞ்சமூர்த்திகள் திருத்தேர் திருவிழா

சென்னை முத்தியால்பேட்டை லிங்கி செட்டி தெருவில் உள்ள அருள்மிகு மரகதாம்பாள் சமேத மல்லிகேஸ்வரா் திருக்கோயிலில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு அருள்மிகு மரகதாம்பாள் சமேத மல்லிகேஸ்வரா் பஞ்ச மூர்த்திகளின் திருத்தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

அருள்மிகு மரகதாம்பாள் சமேத மல்லிகேஸ்வரா் திருக்கோயிலில் திருத்தேர் திருவிழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி,இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் நடைபெற்ற திருத்தேர் திருவிழாவில் 36அடி உயரம் கொண்ட இத்திருத்தேரில் அருள்மிகு மரகதாம்பாள் சமேத மல்லிகேஸ்வரா் சர்வ அலங்காரத்துடன் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி திருவீதி உலா வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இத்திருத்தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மிகவும் பழைமைவாய்ந்த சிறப்புமிக்க அருள்மிகு மரகதாம்பாள் சமேத மல்லிகேஸ்வரா் திருக்கோயில் திருத்தேர் திருவிழாவில் அறங்காவலர்கள் வெங்கடகோபால கிருஷ்ணன்,மெய்யப்பன்,வெங்கடேசன்,மலர்ச்செல்வி,கோகுல்நாத்,நிர்வாக அதிகாரி முத்துராஜ்,கோயில் அர்ச்சகர் பிரவீன் குருக்கள்,சிவனடியார் சேவா சங்கம் கந்தவேல் செட்டியார்,மோகன் குமார்,கெளரவத் தலைவர்கள் கண்ணன்,செல்லியப்பன்,முருகதாஸ்,பார்த்தசாரதி,தலைவர் சந்தான கிருஷ்ணன்,துணைதலைவர் சண்முக சுந்தரம்,செயலாளர் சுரேஷ்குமார்,பொருளாளர் பாலாஜி,இணைசெயலளர்கள் சுரேஷ்குமார்,பாலாஜி,பாஸ்கர்,ராஜன்,குமார்,குமரேசன்,கமிட்டி உறுப்பினர்கள் விஸ்வநாதன்,ராஜவேலு,கிருஷ்ணமூர்த்தி,ராமு மற்றும் கோயில்நிர்வாகிகள்,விழாகுழுவினர்கள்,உறுப்பினர்கள், பக்தர்கள் பலர் விழாவில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

About Author