January 24, 2025

உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் 7வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மருத்துவ முகாம்

சென்னை மயிலாப்பூரில் உள்ள காரணீஸ்வரர் பக்கோடா சமூக நலக்கூடத்தில்,
உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் மாநில தலைவர் சுடர் வேந்தன் அவர்களின் தலைமையில் தென் சென்னை மாவட்ட 7வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மருத்துவ முகாம், கண் பரிசோதனை முகாம், இரத்த தான முகாம் நடைபெற்றது.
இதில் மாநில பொதுச் செயலாளர் ஜாகிர் உசேன்
மாநில பொருளாளர் பத்திர காளிமுத்து
சென்னை மண்டல செயலாளர் அஸ்லம் கான்
மற்றும் தமிழ்நாடு சிறு பத்திரிகையாளர்கள் நல சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கே.அப்துல் காதர் மற்றும் உரிமைக்குரல் ஒட்டுநர் தொழிற்சங்கத்தின் மாநில,மாவட்ட, சென்னை மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.

About Author