இந்தியாவின் பிரபல வங்கிகளுள் ஒன்றான ஃபெடரல் வங்கியின் அடையார் கிளை, “எனது பெயர் அடையார், அடையார் தான் நான்” (“I am Adyar, Adyar is me”) என்று பெயரிடப்பட்ட ஒரு தனித்துவமான செயல்திட்டத்தின் வழியாக சென்னை மாநகரின் மிக முக்கியப் பகுதியான அடையார் மற்றும் அதன் மக்களை கௌரவித்து கொண்டாடியது. அடையாரில் அமைந்துள்ள ஃபெடரல் வங்கி கட்டிடத்தின் சுவர்கள், இப்பகுதியின் துடிப்பான, உயிரோட்டம் மிக்க உணர்வை பிரதிபலிக்கும் வகையில் வண்ணம் தீட்டப்பட்டு மிளிர்ந்தன.
அடையார் பகுதியின் அமைவிடங்களையும் மற்றும் இங்கு வாழ்ந்த மற்றும் தற்போது வாழ்கின்ற மக்களின் கதைகளையும் அழகாக கட்சிப்படுத்துகின்ற ஒரு கலை, ஓவிய கண்காட்சி நிகழ்வும் வங்கிக்கிளையில் நடைபெற்றது. சென்னை மாநகர காவல்துறையின் துணை ஆணையர் – போக்குவரத்து திரு. சமாய் சிங் ஐபிஎஸ், இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். ஃபெடரல் வங்கியின் ஹோல்சேல் வங்கி சேவை பிரிவின் தேசிய தலைவரும், குரூப் தலைவருமான திரு. ஹர்ஷ் துகார், முதுநிலை துணைத்தலைவரும், சென்னை மண்டல தலைவருமான திரு. இக்பால் மனோஜ், தலைமை சந்தையாக்கல் அதிகாரி திரு. MVS மூர்த்தி, துணை உதவி தலைவர் 1 மற்றும் சென்னை பிராந்திய தலைவர் பெட்டி ஆன்டனி ஆகியோர் முன்னிலை வகித்த இக்கொண்டாட்ட நிகழ்வில் வங்கியின் பணியாளர்கள், பிற சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஆயத்தப்பணிக்கான தொடக்க காலகட்டத்தில் சென்னை மாநகரில் அடையார் பகுதியை சிறப்பான வாழ்விடப் பகுதியாக மாற்றியிருக்கின்ற அனைத்து விஷயங்களை வங்கி குழுவினர் சேகரித்தனர். இப்பகுதி இவ்வளவு சிறப்பானதாக உருவாவதற்கு எதிர்கொண்ட கடும் சிரமங்கள், சவால்கள், வெற்றிகள் மற்றும் சாதனைகள் தொடர்பான தகவல்களை பல நபர்களிடமிருந்து இக்குழு கேட்டுப்பெற்றது. ஏறக்குறைய 100 நிகழ்வுகளின் கதைகளும் மற்றும் அதனோடு தொடர்புடைய நபர்களின் பழங்கால நிழற்படங்களும், ஓவியங்களும் சேகரிக்கப்பட்டன. இந்த சித்தரிப்புகளிலிருந்து மிகச்சிறப்பான மற்றும் முக்கியமான 40 கதைகள் தேர்வு செய்யப்பட்டு, அடையாளர் ஃபெடரல் வங்கியின் கிளை அலுவலகத்தில் ஒரு பிரத்யேக கண்காட்சி நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. கூடுதலாக, அடையாரின் இந்த பரப்புரை விளம்பரத்துடன் 100க்கும் அதிகமான ஆட்டோரிக்ஷாக்கள் நகரெங்கும் பயணித்து இந்த முன்னெடுப்பு வழங்கும் செய்தியை இப்பெருநகரெங்கும் கொண்டுபோய் சேர்க்கும். அடையார் பகுதியில் அமைந்துள்ள பல்வேறு கடைகளில் ஃபெடரல் வங்கியின் பிராண்டு விளம்பரப்பலகைகளையும் அடையார் பகுதிக்கு வருகை தரும் நபர்கள் காண்பார்கள்.
சென்னை மண்டல தலைவர் & முதுநிலை துணைத்தலைவர் திரு. இக்பால் மனோஜ், இது தொடர்பாக கூறியதாவது: “இந்த புவியியல் தகுதி ஃபெரல் வங்கிக்கு ஒரு முக்கியமான சந்தையாகும். தமிழ்நாடு மாநிலத்திலுள்ள எமது வாடிக்கையாளர்களின் வங்கிசார் தேவைகளை, அவர்களுக்கு முழுமையாக திருப்தியளிக்கும் வகையில் எமது சேவைகளின் வழியாக, பூர்த்திசெய்வதில் நாங்கள் உறுதி கொண்டிருக்கிறோம். அடையாரில் தினசரி வாழ்க்கையை வசதியானதாக ஆக்குவதற்கு பங்களிப்பு செய்கின்ற பலரையும் இந்நிகழ்வு கொண்டாடி கௌரவிக்கிறது. இங்கு வாழும் எண்ணற்ற மக்களுள் ஒருவராக அடையார் பகுதியின் ஒரு முக்கிய அங்கமாக திகழ்வதில் நாங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறோம்.”
அடையார் கிளையில் ஃபெடரல் வங்கி செயல்படுத்தியிருக்கும் இந்த தனித்துவமான திட்டம், வெறும் வங்கி பரிவர்த்தனைகளை சார்ந்ததாக மட்டுமல்லாமல், தனிப்பட்ட விதத்தில் இப்பகுதி மக்களோடு இவ்வங்கி கொண்டிருக்கும் பிணைப்பையும், நெருக்கத்தையும் கோடிட்டுக் காட்டுவதாக அமைந்திருக்கிறது. இப்பகுதிக்கே உரிய கலாச்சாரத்தை உள்வாங்கி ஏற்றுக்கொண்டு, இதன் ஒரு அங்கமாகவே இவ்வங்கி மாறியிருக்கிறது. வாடிக்கையாளர்களுக்கே முதன்மை அங்கீகாரமும், முன்னுரிமையும் வழங்க வேண்டுமென்ற இவ்வங்கியின் குறிக்கோள் இலக்கை செயல்படுத்தும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. வங்கிச் சேவை என்பதையும் கடந்து, தாம் செயல்படும் இடத்தைச் சுற்றி வாழ்கின்ற சமூகத்தினரோடு உணர்வுரீதியான ஒரு பிணைப்பை உருவாக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் நடத்தப்பட்டிருக்கும் இம்முயற்சி, இப்பகுதி மக்களுக்கு அவர்கள் மதிக்கப்படுகின்றனர் மற்றும் அவர்களது கருத்துகளுக்கு இவ்வங்கி கவனத்துடன் செவிமடுக்கிறது என்ற செய்தியினை வலுவாக எடுத்துரைக்கிறது.
பெடரல் வங்கி லிமிடெட் குறித்து : பெடரல் வங்கி, (NSE : FEDERALBNK), இந்திய தனியார்துறை வங்கிகளுள் முன்னணி வங்கியாக நாடெங்கிலும் ஏறக்குறைய 1,372 வங்கிக்கிளைகள் மற்றும் 1,914 ஏடிஎம்கள் / ரீசைக்கிளர்கள் அமைவிடங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான வலையமைப்புடன் இயங்கி வருகிறது. 2023 மார்ச் 31 அன்று இவ்வங்கியின் மொத்த பிசினஸ் கலவை (டெபாசிட்கள் + கடன்கள்) ₹3.87 இலட்சம் கோடியாக இருந்தது. Basel III வழிகாட்டலின்படி கணக்கிடப்பட்ட இவ்வங்கியில் முதலீட்டுக்கான போதுமான நிலை விகிதம் (CRAR) 2023 மார்ச் 31 அன்று 14.81% என்ற அளவில் இருந்தது. ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள வெளிநாடு வாழ் இந்திய வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையாற்றும் ஒரு முக்கிய மையமாக துபாய் மற்றும் அபுதாபியில் பெடரல் வங்கி தனது பிரதிநிதித்துவ அலுவலகங்களை கொண்டிருக்கிறது. குஜராத் இன்டர்நேஷனல் டெக்-சிட்டி (GIFT City) என்பதிலும் ஒரு IFSC பேங்கிங் யூனிட் (IBC) இவ்வங்கிக்கு இருக்கிறது. தனது உயரிய கொள்கைகளையும், கோட்பாடுகளையும் தொடர்ந்து பேணி வரும் அதே வேளையில் உலக அளவில் மிகச்சிறந்த வங்கிகளுக்கு நிகரான சேவைகள் என்ற அளவுகோலையும் கடந்து வாடிக்கையாளர்களுக்கு அகமகிழ்ச்சியையும், திருப்தியையும் உறுதிசெய்கிற ஒரு பெருநிறுவனமாக பெடரல் வங்கி தன்னையே உருமாற்றம் செய்து வருகிறது. அதன் வளர்ச்சிக்கான ஒரு வழிகாட்டலாக எதிர்காலத்திற்கென்று நன்கு வரையறுக்கப்பட்ட ஒரு தெளிவான தொலைநோக்குத்திட்டத்தை பெடரல் வங்கி உருவாக்கி அதனை நோக்கி தனது செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
More Stories
Turyaa Chennai Hosts the Elite and Untameable New Year Party with a Thrilling Twist!
Rajasthani Association Tamilnadu Launches Prestigious ‘Rajasthani-Tamil Seva Awards’ to Celebrate Contributions to Tamilnadu’s Growth
FedEx Powers Super Kings Journey as Principal Sponsor in a Multi-Year Agreement