சென்னை, நவம்பர் 2023: குழந்தைப்பருவ புற்றுநோய் மீது விழிப்புணர்வையும், ஆதரவையும் அதிகரிக்கும் நோக்கத்தோடு “குழந்தைப்பருவ புற்றுநோய் ஒழிப்பு” என்ற பெயரிலான பரப்புரை திட்டத்தின் கீழ் ஒரு நினைவு அஞ்சல் வில்லையை வெளியிட இந்தியா போஸ்ட் உடன் அப்போலோ கேன்சர் சென்டர், சென்னை ஒருங்கிணைந்திருக்கிறது. இந்த புதுமையான முயற்சியின் நோக்கம், இது குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதோடு நின்று விடுவதில்லை; அதற்கும் மேலாக குழந்தைப்பருவ புற்றுநோய்க்கு எதிராக போரிடுவதில் கைகோர்த்திட அனைத்து மக்களையும்ஒருங்கிணைப்பதும் மற்றும் நம்பிக்கை, சக்தி மற்றும் ஒற்றுமை போன்ற ஆழமான செய்தியினை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதும் இதன் குறிக்கோளாகும்.
இந்நிகழ்வில், குழந்தைப்பருவ புற்றுநோயை எதிர்கொண்டு அதனை வெற்றிகரமாக சமாளித்து உயிர் வாழும் குழந்தை நோயாளிகளின் பங்கேற்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்த சிறார்களின் தைரியமும், மனஉறுதியும் இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பலருக்கும் உத்வேகம் அளிப்பதாக இருந்திருக்கிறது.இந்த நினைவு அஞ்சல் தலையை அறிமுகம் செய்து வெளியிடும்கவுரவம் தைரியமிக்க இந்த சிறார்களுக்கு இந்நிகழ்வில் வழங்கப்பட்டது. குழந்தைப்பருவ புற்றுநோய் சுமக்கின்ற சவால்களை வெற்றிகாண்பதில் இச்சிறார்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் மனம் தளராத ஆர்வத்தையும், நம்பிக்கையையும் பிரதிபலிப்பதாக இந்த நினைவு அஞ்சல் தலைவடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிமுக நிகழ்வின் போதுஅப்போலோ கேன்சர் சென்டர் மற்றும் இந்தியா போஸ்ட் ஆகியவற்றிற்கு இடையிலான இச்சிறப்பான ஒத்துழைப்பை வெளிப்படுத்தும் விதத்தில் 60,000 அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன.
தமிழ்நாடு சரகத்தின் அஞ்சல் துறை தலைவர் திருமதி பி பி ஸ்ரீதேவிஇந்நிகழ்வில் கூறியதாவது, “அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் உடன் வரலாற்று சிறப்புமிக்க இந்த ஒத்துழைப்பு நடவடிக்கையில் அங்கம் வகிப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். குழந்தைப்பருவ புற்றுநோய் ஒழிப்பு (‘Stamp Out Childhood Cancer’) என்ற பரப்புரை திட்டத்தை அஞ்சல் தலைகள் வெளியீட்டின் வழியாக மேற்கொள்வது, குழந்தைப்பருவ புற்றுநோய்க்கு எதிரான உலகளாவிய யுத்தத்தில் ஒரு சக்தி வாய்ந்த மற்றும் கனிவான முன்னேற்ற நடவடிக்கையாகும்.உலகெங்கிலுமுள்ள பல நபர்களுக்கு இந்த முன்னெடுப்பு திட்டம்உத்வேகம் அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். கடிதங்களை வழங்குவது மட்டுமன்றி நம்பிக்கை, ஆதரவு மற்றும் ஒற்றுமையின் செய்திகளையும் மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதில் எமதுபொறுப்புறுதியை இந்த அஞ்சல் தலை வெளியீடு பிரதிபலிக்கிறது.ஒரு அஞ்சல் தலையை ஒட்டுவது போன்ற நடவடிக்கைகள் மக்களது கண்ணோட்டங்களில் மாற்றத்தையும், கருணை உணர்வையும், விழிப்புணர்வையும் பேணி வளர்த்து நீடிக்கும் தாக்கங்களை உருவாக்குமென்று நாங்கள் நம்புகிறோம். இந்த சிறிய ஆனால் சக்தி வாய்ந்த குறியீட்டின் ஆற்றலை மேலும் மேம்படுத்தவும் மற்றும்புற்றுநோயை எதிர்த்து போராடும் இளம் வீரர்களின் வாழ்க்கையில்ஆழமான மாற்றத்தை உருவாக்கவும் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்படுவோம்; நமது குறிக்கோள் இலக்கை எட்டுவோம்”.
குழந்தைப்பருவ புற்றுநோயை எதிர்த்து வென்றிருக்கும் ஒரு சிறாரின் தந்தையான திரு மதன், இந்நிகழ்வில் பெற்றோர்களின் சார்பாக பேசியபோது, “ஒரு பெற்றோராக, குழந்தைப்பருவ புற்றுநோய்ஏற்படுத்தக்கூடிய வலி மற்றும் அச்சத்தை நான் நன்கு புரிந்துகொண்டிருக்கிறேன். அதுபோலவே நமது குழந்தைகளும், சிறார்களும் கொண்டிருக்கும் சக்தியையும், தைரியத்தையும், மனஉறுதியையும் நான் அறிவேன். இந்த அஞ்சல் தலை, இத்தகைய சிறார்களது வீரம் மற்றும் துணிச்சலின் அடையாளமாகும். அத்துடன் அவர்கள் பெறுகிற அன்பு, கனிவான சிகிச்சை மற்றும் அக்கறையின் அடையாளமாகவும் இது இருக்கிறது. இந்த கடும் போராட்டத்தில்ஈடுபடுபவர்களாக இக்குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மட்டும் இருப்பதில்லை என்பதையும் இது நினைவூட்டுகிறது” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
அப்போலோ கேன்சர் சென்டர், சென்னை –ன் குழந்தைகளுக்கான இரத்தவியல் புற்றுநோய் துறையின் முதுநிலை சிறப்பு நிபுணர்டாக்டர். ரேவதி ராஜ், இந்த முன்னெடுப்பு திட்டம் குறித்து தனது உற்சாக உணர்வை பகிர்ந்துகொண்டு கூறியதாவது: “குழந்தைகளின் நலவாழ்வு மீது அக்கறையும், அர்ப்பணிப்பும் உள்ளவர்களாக இருக்கும் நாங்கள், குழந்தைப் பருவ புற்றுநோய்க்கு எதிரான யுத்தத்தில் ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயை கண்டறிவதன் மாபெரும் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்திருக்கிறோம். இந்த அஞ்சல்தலை, நம்பிக்கையை மட்டுமின்றி, இதுகுறித்த விழிப்புணர்விற்கும் மற்றும் ஆதரவிற்கும் தேவைப்படும் இன்றியமையாத தேவையையும் சுட்டிக்காட்டுகிறது. ஒவ்வொரு நாளும், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் இந்த இளம் போராளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வீரத்தையும் மற்றும் கடும் சவாலை வென்று மீண்டெழுவதில் காட்டும் வியக்கத்தக்க தைரியத்தையும் நேரடியாக காணும் சாட்சிகளாக நாங்கள் இருக்கிறோம். “குழந்தைப்பருவ புற்றுநோய் ஒழிப்பு” என்றஇந்த முன்னெடுப்பு திட்டம், அஞ்சல்தலை வெளியீடு என்பதையும் கடந்து ஒருமைப்பாடு என்ற வலுவான செய்தியினையும் வழங்குகிறது. தைரியம் மிக்க இந்த குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்க்கையை மேம்படுத்தி, ஒளிமயமான எதிர்காலத்தை அவர்களுக்கு வழங்குவதில் நாங்கள் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுவதாகவும் இது அமைகிறது.”
இந்த சிறப்பு அஞ்சல்தலையை நாம் அனுப்பும் கடிதத்தின் மீது அல்லது ஒரு பேக்கேஜ் மீது ஒட்டி அனுப்பும் நடவடிக்கை, ஒருமைப்பாட்டின் ஒரு அடையாளமாக இருக்கும்; குழந்தைப்பருவ புற்றுநோயின் சவால்களை தைரியமாக எதிர்கொள்ளும் குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் மனத்துணிவை இது பிரதிபலிக்கும். அர்த்தமுள்ள உரையாடல்களையும், விவாதங்களையும் உருவாக்க இந்த அஞ்சல்தலை ஒரு தீப்பொறியாக இருக்கும். குழந்தைப்பருவ புற்றுநோய்க்கு எதிரான யுத்தத்தில் ஆதரவளிக்கவும், நம்பிக்கையை வளர்க்கவும் சமுதாயத்திலுள்ள மக்கள் அனைவருக்கும் பொறுப்பும், பங்கும் இருக்கிறது என்பதை நினைவூட்டுவதாகவும் இது அமையும்.
குழந்தைப்பருவ புற்றுநோய் மீது விழிப்புணர்வை அஞ்சல்தலைகள் வழியாக உருவாக்கும் நோக்கத்திற்கான முதல் நடவடிக்கையாக குழந்தைப்பருவ புற்றுநோய் ஒழிப்பு என்ற பரப்புரை திட்டத்தை தொடங்கியிருப்பதன் மூலம், அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் மற்றும் இந்தியா போஸ்ட் என்ற அஞ்சல்துறையும் ஒருங்கிணைந்து ஒரு சிறப்பான நடவடிக்கையை எடுத்திருக்கின்றன. இந்தஅஞ்சல்தலையின் வடிவமைப்பில் உற்சாகம் நிறைந்த ஒரு குழந்தையின் முகமும் மற்றும் அதனோடு ஒரு QR குறியீடும் இணைந்திருக்கிறது. இக்குறியீடு, “குழந்தைப்பருவ புற்றுநோய் ஒழிப்பில்” தொடக்க நிலையிலேயே நோய் பாதிப்பை கண்டறிவதன் முக்கியத்துவம் பற்றி விவாதிக்கும் குழந்தைகளுக்கான புற்றுநோயியல் மருத்துவர்கள், குழந்தைப்பருவ புற்றுநோயை வென்று வாழ்பவர்கள் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்கள் மற்றும் அஞ்சல் துறையின் முக்கிய நபர்கள் நடத்தும் கலந்துரையாடல் இடம்பெறும் ஒரு காணொளி காட்சிக்கு அழைத்துச் செல்கிறது.”
“குழந்தைப்பருவ புற்றுநோய் ஒழிப்பு” என்ற இந்த முன்னோடித்துவ பரப்புரை திட்டம், ஒற்றுமை மற்றும் கருணையின் ஆற்றலை எடுத்துரைத்து, இதுகுறித்த கலந்துரையாடல்களை தூண்டுகிறது; கனிவான செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் நலனை மேலும் செழுமைப்படுத்துகிறது. அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் மற்றும் இந்தியா போஸ்ட் – க்கு இடையிலான இந்த தனிச்சிறப்பான கூட்டாண்மையின் மூலம் குழந்தைப்பருவ புற்றுநோய்க்கு எதிரான யுத்தத்தில் குழந்தைகளுக்கு சக்தி வாய்ந்த ஒரு புதிய தோழர் கண்டறியப்பட்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
#புற்றுநோயை வெல்வோம்
அப்போலோ கேன்சர் சென்டர்கள் குறித்து– https://apollocancercentres.com/
புற்றுநோய் சிகிச்சையில் செழுமையான பாரம்பரியம்: 30 ஆண்டுகளுக்கும் அதிகமாக மக்களுக்கான நம்பிக்கை வெளிச்சம்.
இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை என்பது, 360-டிகிரி முழுமையான சிகிச்சைப் பராமரிப்பையே குறிக்கிறது. இதற்கு புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கும் மருத்துவ நிபுணர்களின் அர்ப்பணிப்பும், நிபுணத்துவமும் மற்றும் தளராத மனஉறுதியும், ஆர்வமும் அவசியமாகும்.
உயர்நிலையிலான துல்லியமான புற்றுநோயியல் சிகிச்சை வழங்கப்படுவதை கவனமுடன் கண்காணிக்க இந்தியாவெங்கிலும் 325- க்கும் அதிகமான மருத்துவர்களுடன் அப்போலோ கேன்சர் சென்டர்கள் இயங்கி வருகின்றன. திறன்மிக்க புற்றுநோய் மேலாண்மை குழுக்களின்கீழ் உறுப்பு அடிப்படையிலான செயல் நடைமுறையைப் பின்பற்றி, உலகத்தரத்தில் புற்றுநோய் சிகிச்சையை எமது மருத்துவர்கள் வழங்குகின்றனர். சர்வதேச தரத்தில் சிகிச்சை விளைவுகளைத் தொடர்ந்து நிலையாக வழங்கியிருக்கின்ற ஒரு சூழலில் நோயாளிகளுக்கு மிகச்சிறந்த சிகிச்சையை வழங்குவதில் இது எங்களுக்கு உதவுகிறது.
இன்றைக்கு அப்போலோ கேன்சர் சென்டர்ஸில் புற்றுநோய் சிகிச்சைக்காக 147 நாடுகளிலிருந்து மக்கள் இந்தியாவிற்கு வருகின்றனர். தெற்காசியா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் இயங்கும் முதல் மற்றும் ஒரே பென்சில் பீம் புரோட்டான் தெரபி சென்டர்என்பதைக் கொண்டிருக்கும் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ், புற்றுநோய்க்கு எதிரான யுத்தத்தை வலுவாக மேற்கொள்ள தேவைப்படும் அனைத்து வசதிகளையும், திறன்களையும் பெற்றிருக்கிறது.
More Stories
Dr Agarwal’s Eye Hospital to Host Myopia & Digital Eye Strain Patient Summit 2025 in January
Rela Hospital Celebrates Christmas with the Spirit of Spreading Cheer!
Gleneagles Hospital Chennai Unveils Advanced Center for Asthma Care in Chennai