February 5, 2025

சாவி சர்வதேச ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பாக துபாய் ப்ராப்பர்டீஸ் எக்ஸ்போ சென்னை வேளச்சேரியில் நடைபெற்றது.

இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பில் இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஷப்னம் இயக்குநர்கள் மதன் , ஆசிஃப், ஷொயிப் ஆகியோர் தெரிவித்ததாவது:-

உலகமெங்கும் குறிப்பாக பிரிட்டன், சிங்கபூர், கத்தர், பஹ்ரைன், போன்ற நாடுகளில் ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டுவரும் ” சாவி ரியல்டர் “.நிறுவனம் குறிப்பாக துபாய் அதிக கவனம் செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் முக்கிய நகரங்களில் ப்ராப்பர்டீஸ் எக்ஸ்போ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் தற்போது எக்ஸ்போ நடத்துகிறோம். அடுத்த மாதம் கோவை கொடீசியா அரங்கில் கல்யாண மாலை நிகழ்ச்சியை ஸ்பான்சர் செய்கிறோம். இது தொடர்பாக எங்களுடைய அலுவலகம் சென்னை செனடாஃப் சாலை மற்றும் அடையாறு ஆகிய இடங்களில் 24×7 இயங்கி வருகிறது.

உலகில் துபாய் ஒரு வளர்ச்சியடைந்த அமைதியான வாழ்க்கையை அனுபவிப்பதற்கான சிறந்த நாடாக விளங்கு கிறது.

துபாயில் குறைந்தது ரூ.1.5 கோடி முதல் முதலீடு செய்தால் இங்கு 10 ஆண்டுகளுக்கு கோல்டன் விசா வழங்கபடும். அதுமட்டுமில்லாது வாங்கும், விற்பனைக்கு 0% வரியே உள்ளது. முதலீட்டாளர்கள் செய்யும் முதலீடுகளுக்கு 8% முதல் 10% வரை திரும்ப கிடைக்கிறது.
இதன்மூலம் வருவாய் பெருக்கம் அதிகரிக்கும். மேலும் பாதுகாப்பு, சுத்தம், சுகாதாரம் மிக்க மாநகரமாக விளங்குவதால் முதலீட்டாளர்களை வெகுவாக கவரும். அதுமட்டுமில்லாது 100% தனி உரிமையாளராக உங்கள் வங்கி கணக்கின் மூலமாகவே பண பறிமாற்றம் கொள்ளலாம் . தூபாய் பணமதிப்பு எப்போதும் டாலருக்கு நிகராக நிலையான இடத்தில் இருக்கிறது. பணவீக்கம் என்ற பிரச்சினை எப்போதும் இருந்ததில்லை. ஆகவே முதலீடுகளில்.மேலதிக வருவாய் இங்கு காணமுடியும்.
இங்கு சென்னை அடையாறு போட்கிளப், ஈ.சி.ஆர், ஓ.எம்.ஆர் பகுதியை போல் மாறுபட்ட, மதிப்புமிக்க ப்ரப்பர்ட்டீஸ் துபாயிலும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். வளர்ந்து வரும் தூபாய் மற்றும் பஹ்ரைன் போன்ற இடங்களில் முதலீடு செய்யும் போது முதலீட்டாளர்களின் வருவாய் பெருகும் என்பது நிச்சயம் என்று தெரிவித்தனர்.

About Author