December 22, 2024

சீரியல் ரசிகர்களின் பேவரைட் நடிகரான சித்து சித்! – விரைவில் வெள்ளித்திரை ஹீரோவாக களம் இறங்குகிறார்

ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளையடித்த நடிகர் சித்து சித் வெளியிட்ட புதிய புகைப்படங்கள்! – சோசியல் மீடியாவில் வைரலாகிறது

சின்னத்திரை, வெள்ளித்திரை என்ற பாகுபாடு பார்க்கும் காலம் மாறி, எந்த தளமாக இருந்தாலும் மக்களுக்கு பிடித்துவிட்டால் அவர்களை கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் சின்னத்திரை மூலம் மக்களால் கொண்டாடப்பட்ட பலர் தற்போது வெள்ளித்திரை நட்சத்திரங்களாக ஜொலித்துக்கொண்டிருப்பதால், சின்னத்திரையில் முகம் காட்டுவது என்பது மிகப்பெரிய சவலாக இருக்கிறது. அந்த சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டு ஜெயிப்பது சிலர் மட்டுமே. அந்த சிலரில் ஒருவர் தான் நடிகர் சித்து சித்.

‘திருமணம்’ என்ற தொடர் மூலம் மக்களிடம் பிரபலமான சித்து சித், தற்போது ’ராஜா ராணி 2’ தொடரில் ஹீரோவாக நடித்து வருவதோடு, தமிழ் ரசிகர்களின் பேவரைட் சின்னத்திரை ஹீரோவாகவும் உயர்ந்துள்ளார். இந்த இடத்தை பிடிக்க சித்து சித், பல வருடங்கள் கடுமையாக உழைத்திருக்கிறார். சுமார் 6 வருடங்களாக நடன கலைஞராக பணியாற்றிய பிறகே நடிகர் வாய்ப்பை பெற்றவர், திருமணம் தொடர் மூலமாக மக்களிடம் பிரபலம் ஆனார்.

சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு திருவண்ணாமலையில் இருந்து வந்து இன்று தனக்கென்று தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியிருக்கும் சித்து சித், நடிக்கும் தொடர்கள் அத்தனையும் டி.ஆர்.பி ரேட்டிங்கில் நல்ல முன்னேற்றம் பெற்று வருவதால், இவருக்கான ரசிகர் வட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு, இவரை வெள்ளித்திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள்.

சின்னத்திரையில் வெற்றி பெற்ற சித்து சித்தும் தனது அடுத்த இலக்காக வெள்ளித்திரையை நோக்கி பயணிக்க ரெடியாக இருப்பதோடு, சில திரைப்பட வாய்ப்புகளும் அவருக்கு கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே விரைவில் வெள்ளித்திரையில் சித்து சித் ஹீரோவாக களம் இறங்குவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நடிகர் சித்து சித், சமீபத்தில் எடுத்த தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையதளம் மற்றும் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

About Author