December 26, 2024

சென்னை சூளையில் உள்ள காமராஜர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்தனர்

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு தந்தை தெய்வத்திரு ஜி. புண்ணியகோட்டி அவர்களால் நிறுவப்பட்ட பெருந்தலைவர் காமராஜரின் சிலையை ஆண்டுதோறும் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் தவறாமல் கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, பொதுக்குழு உறுப்பினர் மற்றும் மாநில செயலாளர் பி. சுரேஷ் பாபு அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்ட தலைவர் திரு.ரங்கபாஷ்யம் அவர்கள் பங்கேற்றார். மேலும் சர்க்கிள் தலைவர்கள், வட்டத் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் சூளுறையாக பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சியை அமைப்போம், மீண்டும் காங்கிரஸ் ஆட்சி வரும் என்று சபதம் ஏற்றனர்.

About Author