CHENNAI: புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு, தென் சென்னை வடக்கு மேற்கு மாவட்டம் தியாகராய நகர் பகுதி அசோக் நகர் 28- வது தெருவில் ஆயிரம் பேருக்கு சிக்கன் பிரியாணி மற்றும் நலத்திட்ட உதவிகள், எடப்பாடியாரின் தீவிர பக்தன், கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச்செயலாளர் டாக்டர் சுனில்.வி அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை தி.நகர் கழக மேற்கு பகுதி இணைச்செயலாளர் கே.தேன்மொழி அவர்கள் ஏற்பாடு செய்தார்கள். இந்த நிகழ்ச்சியில் தி.நகர் மேற்கு பகுதி கழக செயலாளர் மு.உதயா எம்.ஏ. கழக நிர்வாகிகள் பி.பத்மநாபன், கார்டன் வி.சுரேஷ்குமார், கராத்தே எஸ்.சேகர், காலனி சி.பிரபாகரன், எஸ். சுரேஷ்குமார், அலமேலு, உஷா, மற்றும் கழக தொண்டர்களும் ஏராளமான பொதுமக்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
More Stories
ఘనంగా నరసింహ నగర్ కెనాల్ తెలుగు బాప్టిస్టు సంఘం 50వ వార్షికోత్సవ వేడుకలు
సూర్యకాంతం నటన అనితరసాథ్యం- నటి పద్మిని వ్యాఖ్య
உலக தியான தினம் குறித்த முக்கிய உரை நாளை இந்திய நேரப்படி இரவு எட்டு மணி அளவில் நிகழ்த்த உள்ளது