சென்னை, நவம்பர் 2023: 2023 டிசம்பர் 21 – 22 தேதிகளில்நடைபெறவுள்ள “டேக் பிரைட் 2023” – 20வது தேசிய உச்சிமாநாடு அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள நிலையில் அதன் கருப்பொருளை இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் (சிஐஐ) இளையோர் பிரிவான யங் இந்தியன்ஸ் (Yi) இன்று பெருமையுடன் அறிமுகம் செய்திருக்கிறது. தேசத்தின் வளர்ச்சிக்காக இளம் தலைவர்களது திறனதிகாரம் மற்றும் ஆக்கபூர்வ நிலைமாற்றத்திற்கான கலந்துரையாடலை ஊக்குவிப்பது மீது ஓராண்டு காலமாக அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் முத்தாய்ப்பு நிகழ்வாக இந்த இரு நாள் மாநாடு, சென்னையில் ஐடிசி கிராண்ட் சோழா வளாகத்தில் நடத்தப்படவிருக்கிறது.
இந்த ஆண்டின் டேக் பிரைட் மாநாட்டின் கருப்பொருளான “I am” என்பது இளம் இந்தியர்களின் ஒருமித்த கூட்டு அடையாளத்தின் குறியீடாக இருக்கிறது. யங் இந்தியன்ஸ் அமைப்பில் ஒருங்கிணைகிற இளையோரின் மாறுபட்ட பன்முகத்தன்மையுள்ள பண்பியல்புகள், பேரார்வங்கள் மற்றும் ஆற்றல்களை கொண்டாடும் இது அனைவரையும் அரவணைத்து ஒருங்கிணைக்கும் தன்மைக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. இந்த உச்சிமாநாட்டின் 20வது பதிப்பு இளையோரின் தலைமைத்துவ பண்பு, தேசத்தின் கட்டமைப்பு மற்றும் சிந்தனையில் தலைமைத்துவம் என்பது மீது கவனம் செலுத்தும். இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் Yi-ன் பொறுப்புறுதியை வரையறை செய்கிற அடித்தளத் தூண்களாக இக்குறிக்கோள்கள் இருக்கின்றன.
தமிழ்நாடு அரசின் மாண்புமிகு அமைச்சர்களான டாக்டர் பழனிவேல்தியாக ராஜன், டாக்டர் டிஆர்பி ராஜா, ஜி20 மாநாட்டின் ஷெர்பா திரு அமிதாப் காந்த், தொழில்துறையின் பிரபல ஆளுமைகளான திரு ஸ்ரீதர் வேம்பு, திரு மிதுன் சச்செட்டி மற்றும் Ms. விட்டா டேனி போன்ற புகழ்பெற்ற ஆளுமைகள் உட்பட பலர் இம்மாநாட்டில் சிறப்புரை வழங்குகின்றனர். பல்வேறு பின்புலங்களைச் சேர்ந்த பேச்சாளர்கள், அவர்கள் சார்ந்த துறைகளிலிருந்து விலைமதிப்பில்லாத உள்நோக்குகளையும், அனுபவங்களின் பகிர்வுகளையும் வழங்கவிருப்பதால் தேசத்தின் கட்டமைப்பு மற்றும் இளைஞர்கள் திறனதிகாரம் பெறச் செய்தல் என்ற அம்சங்கள் குறித்த தெளிவான விளக்கம் இந்த உரைகளில் இடம்பெறும்.
யங் இந்தியன்ஸ் (Yi) அமைப்பின் தேசிய தலைவர் திரு. திலீப் கிருஷ்ணா இது பற்றி கூறியதாவது: “வேற்றுமையில் ஒற்றுமை என்ற விழுமியத்தின் சாரத்தை டேக் பிரைட் 2023 நிகழ்வு கொண்டிருக்கிறது. தாக்கம் ஏற்படுத்தும் மாற்றத்தை முன்னெடுக்க இளம் இந்தியர்களின் ஆற்றல் மிக்க மனங்கள் ஒருங்கிணைகின்ற ஒரு செயல்தளமாக இந்நிகழ்வு இருக்கும். மிகவும் வலுவான மற்றும்மீண்டெழும் திறனை சிறப்பாக கொண்டிருக்கும் ஒரு சமூகத்தை உருவாக்க ஒவ்வொரு நபரின் தனித்துவ பண்பும், திறனும் பங்களிப்பை வழங்க முடியும் என்பதை இந்நிகழ்வு அங்கீகரிக்கிறது. அவர்கள் செயலாற்றும் துறைக்குள்ளும், அமைவிடங்களுக்குள்ளும் நேர்மறையான நிலைமாற்றத்தை முன்னெடுத்துச் செல்ல இளம் தலைவர்களை ஏதுவாக்கும் குறிக்கோளுடன் இந்த உச்சிமாநாட்டின் 20வது பதிப்பை இங்கு நடத்துவதில் நாங்கள் பெருமிதமும், உற்சாகமும் அடைகிறோம்.”
சிஐஐ தமிழ்நாடு மாநில கவுன்சில்-ன் தலைவர் திரு. சங்கர் வானவராயர் பேசுகையில், “இந்தியாவின் இளம் தலைமுறையினரது குரல்களையும், ஆர்வங்களையும் வலுவாக எடுத்துரைக்கும் ஒரு நிகழ்வான டேக் பிரைட் 2023-ன் ஒரு அங்கமாக செயல்படுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். இளம் தலைவர்களையும் மற்றும் ஒத்துழைப்புக்கான உகந்த சூழலையும் வளர்த்து உருவாக்குவது மீது யங் இந்தியன்ஸ் அமைப்பு கொண்டிருக்கும் பொறுப்புறுதியானது நமது தேச வளர்ச்சியின் நெறிமுறைகளை வலுவாக பிரதிபலிக்கிறது. இந்த துடிப்பான, விவேகமான இளம் திறமைசாலிகளோடு இணைந்து செயல்படுவதையும் மற்றும் ஒலிமயமான எதிர்காலத்தை நோக்கிய அவர்களின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதையும் நான் ஆர்வத்தோடு எதிர்நோக்குகிறேன்” என்று கூறினார்.
யங் இந்தியன்ஸ் அமைப்பு, இந்த ஆண்டு எட்டு புதிய கிளைகளை தொடங்கி, நாடெங்கிலும் அதிக நகரங்களுக்கு தனது செயற்பரப்பை விரிவாக்கியிருக்கிறது. இந்திய அரசின் இளைஞர்விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் ஒத்துழைப்போடு 50 Y20 அமர்வுகள் மற்றும் 6 மேரா யுவ பாரத் பயிலரங்குகள் 2023 – ம் ஆண்டில் வெற்றிகரமான நடத்தப்பட்டிருக்கின்றன. மேலும் குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்துகிற விதத்தில் புகழ்பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒத்துழைப்போடு யங் இந்தியன்ஸ் மசூம் கப் லீக் போட்டி தொடரும் நடத்தப்பட்டிருக்கிறது.
தனது மசூம் செயல்திட்டத்தின் வழியாக விழிப்புணர்வை உருவாக்குவதன் மீதும் மற்றும் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் துஷ்பிரயோகத்தை அடியோடு ஒழிக்கவும் யங் இந்தியன்ஸ் அமைப்பு உறுதி கொண்டிருக்கிறது. இந்த முக்கியமான நோக்கத்தை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதே சென்னை சூப்பர் கிங்ஸ் – ன் ஒத்துழைப்போடு நடைபெறும் யங் இந்தியன் மசூம் கப் 2023 நிகழ்வின் நோக்கமாகும்.
2023 டிசம்பர் 20 அன்று நடத்த திட்டமிடப்பட்டிருக்கும் இதன் மாபெரும் இறுதிப்போட்டி , ஒரு உன்னதமான நோக்கத்திற்காக பிராந்திய அளவிலான சேம்பியன் அணிகள் பங்கேற்கும் முத்தாய்ப்பு நிகழ்வாக அமையும். கூடுதலாக, யங் இந்தியன்ஸ் தேசிய அணிக்கும் மற்றும் சிஎஸ்கே – க்கும் இடையில் நடைபெறும் ஒரு எக்ஸிபிஷன் லீக் போட்டி, குழந்தைகளை பாதுகாப்பதன் அவசியம் பற்றிய செய்தியை மக்களிடம் நிச்சயமாக கொண்டுபோய் சேர்க்கும்.
சாலை பாதுகாப்பிற்காக ஸ்விங் ஸ்டெட்டர் இந்தியா நிறுவனம், உடல்நல சேவைகளுக்காக EMRI மற்றும் யங் இந்தியன்ஸ் மசூப் கப் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற பல்வேறு நிறுவனங்களுடன் கூட்டாண்மைகளை யங் இந்தியன்ஸ் மேற்கொண்டிருக்கிறது. முக்கியமான சமூக நல நோக்கங்கள் மற்றும் முன்னெடுப்பு நடவடிக்கைகள் மீது அது கொண்டிருக்கும்அர்ப்பணிப்பும், பொறுப்புறுதியையும் இந்த கூட்டுவகிப்பு நடவடிக்கைகள் நேர்த்தியாக வெளிப்படுத்துகின்றன.
More Stories
4 Warm Winter Drinks to Pair with Choco Pie for a Sweet Winter Treat
SPIN Chennai celebrates the spirit of excellence and innovation at 15th Edition of Watts Humphrey Awards 2024
GET FESTIVE READY WITH PLATINUM EVARA