சென்னை, ஜனவரி 25, 2024: தைப்பூச தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு பிஜேபியின் மாநில செயலாளர் திரு வினோஜ் பி செல்வம் அவர்களது சார்பாக இன்று (25-01-2024) சென்னையில் உள்ள முக்கிய கோவில்களில் காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி எல்டாம்ஸ் சாலையில் உள்ள அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பூங்காநகரில் அமைந்துள்ள கந்தகோட்டம் திருக்கோவில், திருவல்லிக்கேணியில் உள்ள எட்டாம்படை வீடு ஸ்ரீ முருகன் திருக்கோவில், வில்லிவாக்கத்தில் அமைந்துள்ள கல்யாண சுப்ரமணிய சுவாமி திருக்கோவில், அமைந்தகரையில் உள்ள அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில், அண்ணாநகரில் உள்ள ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவில்களில் நடைபெற்றது. அன்னதான நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். மேலும் நிகழ்ச்சியின் போது கோவில்களில் சிறப்பு பிரச்சாரம் நடைபெற்றதுடன் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமும் விநியோகிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்த பாஜகவின் பகுதி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பிஜேபியின் மாநில செயலாளர் திரு வினோஜ் பி செல்வம் பாராட்டுகளை தெரிவித்தார்.
More Stories
Labor of Love: Farmer Sundar Raj’s Story of Devotion and Resilience
சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 135வது பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் மிகை எழுச்சியாக கொண்டாடப்பட்டது
தமிழ்நாடு வக்பு சொத்துக்களை காலக்கெடுவுக்குள் டிஜிட்டல் முறையில் அளவீடு செய்ய தமிழ் மாநில முஸ்லிம் லீக் வலியுறுத்தல்