January 17, 2025

பெண்கள் ஐஏஎஸ் படிக்க வேண்டும் முன்னாள் தமிழக தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி

திருவள்ளூர் அடுத்த போளிவாக்கத்தில் விஜயதசமியை முன்னிட்டு சின்மயா விஷ்வசேனா ஐஏஎஸ் அகாடமி தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில கல்விக் குழுமத்தின் தலைவர் சி.பி.மூவேந்தன்
தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் ஒய்வு பெற்ற தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கே.எஸ்.ஸ்ரீபதி கூறியதாவது:

ஐ.ஏ.எஸ்.படிப்பு என்பது பெரும்பாலும் தமிழக பெண்களுக்கு கனவாகவே இருந்து வருகிறது.

சென்னை போன்ற முக்கிய நகரங்களில் மட்டுமே இந்த ஐஏஎஸ் அகாடமி செயல்பட்டு வருவதால் திருவள்ளூர் போன்ற பகுதிகளில் உள்ள பெண்கள் பிள்ஸ்2 அல்லது ஏதேனும் ஒரு கல்லூரி படிப்பு படிக்கின்றனர்.

இருப்பினும் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு அது முடியாமல் போகிறது. 

இந்நிலையில் சின்மயா அகாடமி ஃபார் சிவில் சர்விஸஸ் மற்றும் விஷ்வசேனா கல்விக் குழுமம் சார்பில் ஐஏஎஸ் அகாடமி துவங்கி இருப்பதால் கிராமப் புற பெண்களும் படித்து பயன்பெறலாம் என கூறினார். 

மேலும்,சின்மயா அகாடமி ஃபார் சிவில் சர்வீஸஸ் முதன்மை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ ராமதேசிகன் கூறும் பொழுது தகுதித்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு 80% வரை கட்டண  சலுகையும் வழங்கப்படும் என்று கூறினார்

About Author