January 22, 2025

மன்சூர் அலிகான் படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை. விரக்தியில் மன்சூர் அலிகான்!

தனது மகன் அலிகான் துக்லக் கதாநாயகனாக நடிக்க, மன்சூர் அலிகான் தயாரித்து, இயக்கியுள்ள படம் “கடமான்பாறை”. ஆகஸ்ட் 26-ம் தேதி, வரும் வெள்ளிக்கிழமை படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிட, முன்கூட்டியே தீர்மானித்து பத்து லட்ச ரூபாய் செலவில் வெளியீட்டு தேதியுடன் போஸ்டர் அடித்து, தயார் நிலையில் இருந்தார் மன்சூர் அலிகான்.

எதிர்பார்த்தபடி போதிய திரையரங்குகள் கிடைக்காததால் “கடமான்பாறை” படம் வெளியாவதில் சிக்கல். இவ்வளவு நாள் பொறுத்தும் பயனில்லயே என மன்சூரலிகான் வேதனை. இன்று இரவுக்குள் கேட்ட திரையரங்கங்கள் கிடைக்காவிட்டால் OTTயில் வெளியிட முடிவு செய்துள்ளார் மன்சூர் அலிகான்!

About Author