I’m சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் சென்னை வேளச்சேரி கிளப்பின் 2026 27 ஆம் ஆண்டுக்கான பதவியேற்பு விழா நடைபெற்றது. ரோட்டரி கிளப் ஆப் சென்னை வேளச்சேரியின் 19 ஆவது தலைவராக ரொட்டேரியன் சங்கர் அவர்களும், செயலாளராக ரொட்டேரியன் சிவசாமி அவர்களும் பொறுப்பேற்றனர். மற்றும் 2026 27 ஆம் ஆண்டிற்கான நிர்வாக குழு உறுப்பினர் அனைவருக்கும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் 200க்கும் மேற்பட்ட சென்னையில் உள்ள பல்வேறு ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் ரோட்டரி மாவட்ட அதிகாரிகள்,ரோட்டரி ஆளுநர்கள் கலந்து கொண்டனர்.ரோட்டரி சென்னை வேளச்சேரி பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இயற்கையை பாதுகாக்கும் வகையில் வேளச்சேரி பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு இன்று அவை பெரும் மரங்களாக வளர்ந்துள்ளன. புதிதாக பொறுப்பேற்றுள்ள சங்கர் அவர்கள் மேலும் பல்வேறு சமூக பணிகளை செய்வோம் என்று பேசினார்.மேலும் போதை பயன்பாட்டில் இருந்து இளைஞர்களை மீட்கும் மையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துவோம் என்றும் தெரிவித்தார். பெண்கள் மேம்பாட்டிற்காக மிகவும் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அவர்கள் சுயதொழில் செய்வதற்கான உதவிகளை செய்து கொடுப்போம் என்றும் தெரிவித்தார்.
சென்னை வேளச்சேரி ரோட்டரி கிளப் 2008 ஆண்டு தொடங்கப்பட்டது.19-வது பொறுப்பேற்பு விழா சென்னையில் நடைபெற்றது.


More Stories
சுந்தரம் ஃபைனான்ஸ், GMT இன்ஜினியர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மேம்பட்ட உலோக வடிவமைப்பு இயந்திரங்களுக்கு எளிதான நிதி வசதி வழங்குகிறது
Indian Bank organises Health Camp for Safai Mitras at Chennai Corporate Office under Swachhata Hi Seva 2026 Campaign
India Energy Week 2027 Sets the Stage for Global Energy Dialogue in Kolkata